சந்திரிகா விரக்தியில் ஓட்டம்!

-நஜீப்-

2015ல் ராஜபக்ஸாக்களுக்கு எதிராக மைத்திரியைக் களமிறக்கி அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க. இந்த முறையும் அப்படி ஒரு முயற்சியில் அவர் இறக்கி இருந்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்தது போல அவருக்கு தனது விளையாட்டை இந்தமுறை ஆடமுடியாது போய் விட்டது. இப்போது எந்தக் கூட்டணி அமைந்து என்ன திட்டம் வகுத்தாலும் எதுவுமே நடக்கப் போவதில்லை. அனுரா தரப்பினர் செல்வாக்கு நாட்டில் ஆச்சர்யப்படத் தக்க அளவில் மேலோங்கி விட்டது.

இதானால் எதுவுமே பண்ண முடியாது என்ற அவர் தனது சகாக்களிடத்தில் தனிப்பட்ட ரீதியில் முன்பு கூறி இருந்தார்.  இந்தப் பின்னணியில்  அரசியல் களத்தில் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்ற விரக்தியில் தனது கூட்டணி அமைக்கின்ற முயற்சிகளையும் கைவிட்டு இப்போது அவர் லண்டனுக்குப் போயிருக்கின்றார்.

கடந்த வாரம் அவரது மூத்த சகோதரி சுனேத்ராவும் இதன் பின்னர் சுதந்திரக் கட்சியை மீட்டெடுக்க முடியாது. அது அழிவின் உச்சிக்கே போய்விட்டது என்று செல்லி இருந்ததும் தெரிந்ததே.

நன்றி: 24.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

107 பேரின் உயிரை பறித்த மாஸ்கோ தாக்குதல்

Next Story

ரணில்-பசில் கயிறிழுப்பு!