–நஜீப்–
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரனதுங்ஹ மேல் மாகாண முதலமைச்சராக இருந்த போது சில வருடங்களுக்கு முன்னர் குடிமகன் ஒருவனை அச்சுறுத்தி பலாத்காரமாக 64 மில்லியன் கப்பம் வாங்கியதால் நீதி மன்றம் ஐந்து வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 25 மில்லியன் தண்டப் பணத்தையும் மேலும் பாதிக்கப்படவருக்கு 10 இலட்சம் ரூபா நஷ்டஈடும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்த ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்புக்கள் நடை முறையில் அமுலாவதில்லை. அது பொதுவிதி. எனவேதான் அவர் இன்னும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரகவும் ஆளும் தரப்பு சபை முதல்வராக-கொரோடாவாக தொடர்ந்து பதவி வகித்து வருகின்றார். குற்றவாளிகளைத் தொடர்ந்தும் பதவியில் வைத்திருக்கும் உலகில் ஒரே நாடு இலங்கையாகத்தான் இருக்க முடியும்?
இப்படிப்பட்ட வன்முறையாளர்கள்-கப்பம்காரர்கள்தான் ஜனாதிபதிக்கு மிக விசுவாசமானவராகவும் இருக்கின்றார். எனவே நமது நாடாளுமன்றத்தில் பாதாள உலகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருப்பதை நீதி மன்றமே உறுதி செய்கின்றது.
நன்றி:12.06.2022 ஞாயிறு தினக்குரல்