–நஜீப்–
நன்றி: 09.02.2025 ஞாயிறு தினக்குரல்
பாரிந்த ரணசிங்ஹ இவர் நமது சட்டமா அதிபர். சிரேஸ்டத்தை புறம் தள்ளி இவருக்கான நியமனத்தை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி ரணில். எப்படியானதோர் அரசியல் பின்னணியில் ரணில் அதிகாரத்துக்கு வந்தார் என்பதை முழு நாடும் அறியும்.
குடி மக்களால் அடியோடு நிராகரிக்கப்பட்ட ஒரு மனிதனிடம் ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தை கையில் கொடுத்து அவருக்கு தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையை ஏன் வழங்கினார்கள் என்பதும் அடிப்படை அரசியல் அறிவுள்ள மக்களுக்கு புரியும்.
ரணில் அதிகாரத்துக்கு வருகின்ற போது நாட்டில் நடந்த படுகொலைகள் ஊழல்கள் மோசடிகள் பலவற்றுக்கு ராஜபக்ஸாக்கள் மீது டசன் கணக்கான குற்றச்சாட்டுக்கள் இருந்தன. இதில் ஈஸ்டர் படுகொலை. லசந்த, பிரகீத், தஜூதீன், படுகொலைகள் பிரதானமானவை.
அத்துடன் இது தொடர்பான பல சாட்சிகளின் கொலைகளும் இதில் அடக்கம். இந்தப் பின்னணியில் ஊடகவியலாளர் லசந்த படுகொலைகளுடன் சம்பந்தப்பட்ட மூன்று பேரை சட்டமா அதிபர் பாரிந்த விடுவித்திருப்பது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.