சஜித் வராமைக்கான நியாயங்கள்!

-நஜீப்-

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அணுர-சஜித் விவாதம் சஜித் தரப்பு சொல்லி இருந்த ஜூன் ஆறாம் (6) திகதி நடக்க மாட்டாது. அதற்கு நாங்கள் எமது தலைவரை அனுப்ப மாட்டேம் என்று புட்நோட் புகழ் சுஜீவசேமசிங்ஹ அன்று முன்கூட்டியே ஊடகச் சந்திப்பில் சொல்லி இருக்கின்றார்.

இதற்கு அவர் குறிப்பிடுகின்ற நியாயங்கள் அரச சார்பு தொலைக் காட்சி ஒன்றில்  இந்தப் விவாதம் நடப்பதால் அதில் எமது தலைவர் கலந்து கொள்ள மாட்டார். அது அணுராவுக்கு சார்பாக நடந்து கொள்ளும் என்று ஒரு காரணத்தை கூறி இருக்கின்றார்.

சுஜீவ கூறும் அடுத்த காரணம். அணுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகளைச் சந்திக்க மலிக் சமரவிக்கிரமவுடன் சென்றிருந்தார். அப்படி ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவு வைத்துக் கொண்டிருப்பவருடன் நாங்கள் எங்கள் தலைவரை எதற்காக விவாதத்துக்கு அனுப்ப வேண்டும்.

அவர் ஏன் மலிக்குடன் அங்கு போனார் என்பது எமக்குத் தெரிய வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கின்றார். அவரது இந்த நியாயங்களில்-வாதங்களில் எந்தளவுக்கு நியாயங்கள் இருக்கின்றன என்று நாங்கள் குடி மக்களிடம் தான் கேட்கவேண்டி இருக்கின்றது.

நன்றி: 09.06.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஜூலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு!

Next Story

அரசியல் அரங்கில் மங்களான காட்சிகள்!