சஜித் பௌசி லடாய்-2

-நஜீப்-

கடந்த நாடாளுமன்றத் தொடரில் கட்சித் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்டதற்காக பௌசிக்கு ஒழுக்காற்று நடவடிக்கை என சஜித் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இது பற்றி பௌசியிடம் கேட்டால் யார் யாருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது என்று அவர் பகிரங்கமாகவே சஜித்தை விமர்சித்திருக்கின்றார்.

நான் அப்படி என்னதான் தப்புப் பண்ணிவிட்டேன்? ஐ.எம்.எப். உதவியை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு ஆலாசனை சொன்னவரே நம்ம தலைவர் சஜித்தானே அப்படி இருக்க அவர் தீர்மானத்துக்கு ஆதரவாக நான் வாக்களித்ததில் என்ன தப்பு இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பி வருகின்றார்.

இதற்கு முன்னரும் அவர் ஆளும் தரப்புக்கு விசுவாசமாகப் பேசி வருகின்றார் என்று சஜித் அவரிடம் நெருக்கியபோதும் பௌசி தாருமாறாக சஜித்துக்குப் பதில் கொடுத்திருந்ததும் தெரிந்ததே.

நமக்கு வருகின்ற தகவல்படி அமைச்சரவை மாற்றம் ஒன்று நடக்குமாக இருந்தால் முஸ்லிம் சமய விவகார அமைச்சு பெரியவருக்கு என்று ஒரு செய்தி.

நன்றி: 07.05.2023 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

'தி கேரளா ஸ்டோரி' எப்படி உள்ளது- விமர்சனம்

Next Story

நாமலின் 2 ம் தலை முறை!