சஜித் தரும் விளக்கம் என்ன!

நஜீப்

நன்றி:15.02.2026 ஞாயிறு தினக்குரல்

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தரைக் குடியமர்த்தியது தவறு என தற்போது நடவடிக்கைகள்.! சம்மந்தப்பட்டவர்கள் தற்போது தடுப்புக்காவலில். இதில் சில தேரர்களும் அடக்கம். சிலர் ஜனாதிபதியிடம் சொல்லி முன்பு போல இவர்களை விடுவிக்க முயன்று இன்று மூக்குடைபட்டிருக்கின்றார்கள்.

அப்படி மாநாயக்கதேரர்களிடம் போய் முரைப்பட்டார் திலித் ஜயவீர. அவரிடம் தேரர்கள் சட்டத்தை அமுல் படுத்த அரசுக்கு இடம் கொடுங்கள். யார் தவறு செய்தாலும் ஏற்க முடியாது என்று ஆளைத் துரத்தினார்கள்.அதே போன்று மொட்டு அரசியல்வாதிகளும் குறிப்பாக நாமல் தேரர்களுக்காக ஆஜராகி வருகின்றார்.

அப்பன்தானே சட்டவிரோதமாக அங்கு வேலையைத் துவங்கியவர்? ஆனால் சஜித்தின் ஐமச.செயலாளர் மத்தும பண்டாராவும் இனவாத கருத்துக்களுடன் சட்டத்துக்கு முரணாக இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றார். இது தொடர்பாக சிறுபான்மை சமூகங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிந்திய தகவல்படி பிணையில் விடுதலையாம்.

Previous Story

டிரம்புடன் ஈரான்.. அணுசக்தி டீலுக்கு ரெடி.. திடீரென ?

Next Story

வெற்றி: இந்தியாவை கவலைப்பட வைத்த 'ஒரு விஷயம்'