சஜித் கூட்டணியில் பிளவு!

-நஜீப்-

நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் வருமாக இருந்தால் இன்று சஜித்தின் ஐமச. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிலிருந்து வெளியேறிவிடும் என்று நாம் அடித்துக் கூறுகின்றோம்.

கூட்டணியில் இணைந்திருந்த டலஸ், ஜீ.எல் போன்றவர்களுக்கு ஏமாற்றம். ஹக்கீம் ரிசாட் மற்றும் மனோவுக்கு சஜித் தேசியப் பட்டியல் கொடுத்தாலும் அவர்கள் இந்தக் கூட்டணியில் தொடர்ந்தும் இருக்கமாட்டார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பை மையமாக வைத்துத்தான் இந்த சிறுபான்மைத் தலைவர்கள் சஜித் அணியில் இணைவதில் ஆர்வமாக இருந்தனர். இப்போது தேசியப் பட்டியலும் ஓகே இதன் பின்னர் காரியம் சாதிப்பதாக இருந்தால் ஜனாதிபதி அணுரவுடன் நெருக்க உறவு இவர்களுக்கு முக்கியம்.

தேசியப் பட்டியல் பெற்றுக் கொண்டவர்களும் ஏமாந்தவர்களும் கூட்டணியில் இருந்து தள்ளி நிற்க நொண்டிக் காரணங்களைத் தேடுவார்கள். தற்போது கலாநிதி பட்டம் தொடர்பாக சபாநாயருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனை என்று ஒரு கதை இருக்கின்றது.

அது வந்தால் கூட இவர்கள் நிச்சயம் ஸ்கெப்பாகி ஆளும் தரப்புக்கு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். பொறுத்திருந்த பாருங்கள்.

Previous Story

தமிழர் மெகா கூட்டணி!

Next Story

தேசிய பட்டியல் கலாட்டா!