“கோழியில் இருந்து முட்டை வந்ததா.. முட்டையில் இருந்து கோழி வந்ததா”?…

பல நூறு ஆண்டுகளாக பெரும் புதிராக இருந்த கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டனர்.

நாம் வாழும் இந்த பூமியில் பல மர்மங்கள் புதைந்து இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி என்பது பல மர்மங்கள், புதிர்களுக்கு விடை கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் மர்மமாக இருந்த பல விஷயங்களுக்கு சயின்ஸ் மட்டுமே துல்லியமான பதிலைக் கொடுத்துள்ளது.

அதன்படி பல ஆண்டுகளாக இருக்கும் பெரிய புதிர்களில் ஒன்று கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பதாகும். இந்த புதிருக்கான விடையை ஆய்வாளர்கள் நெருங்கியுள்ளனர்.

 What came first - chicken or egg the biggest mystery finally solved

கேள்வி: கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது பல ஆண்டுகளாகப் புதிராகவே இருக்கும் ஒரு கேள்வி.. இதற்கிடையே தவளைகள் மற்றும் பல்லிகளை வைத்து நடத்திய ஆய்வில் இதற்கான முடிவை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

‘லாம்’?

The history/origin of the question mark - Where did it come from?

அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஊர்வன, பறவை இனங்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாகக் குட்டி போட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 51 புதைபடிமங்கள் மற்றும் 29 உயிரினங்களை ஆய்வு செய்ததில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் oviparous விலங்குகள், குட்டி போட்டுப் பாலூட்டும் viviparous விலங்குகள் என இரு வகை விலங்குகளையும் இந்த ஆய்வில் உட்படுத்தியுள்ளனர்.

இந்த முடிவுகள் நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், “இப்போது முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் விலங்குகளின் பண்டைய புதைவ படிவங்களை ஆய்வு செய்ததில் அப்போது EER என்ற முறையை இனப்பெருக்கத்திற்கான முறையாக இருந்தது தெரிய வந்தது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த EER என்பது தாய் தனது கருவை அதிக காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்வதையே குறிக்கிறது. ஆய்வு முடிவுகள்: அந்த ஆய்வு முடிவில், “4 கால்களைக் கொண்ட முதுகெலும்புடன் இருக்கும் அம்மினியோட்ஸ் என்ற வகை உயிரினங்கள் தோன்றும் முன்பு இனப்பெருக்கத்திற்கு நீர் அல்லது நீரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தாக வேண்டி இருந்தது.

இப்போது உள்ள தவளைகளை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். அதேநேரம் 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அம்னியோட்கள் தோன்றிய பிறகு நிலைமை மாறியது. அம்மினியோட்சுக்கு சற்று கடினமான தோல்கள் உள்ளிட்டவை கிடைத்தது. இதன் மூலம் அந்த உயிரினங்களால் நீரைத் தாண்டி வெளியே செல்ல முடிந்தது. இதில் அம்மோனியோடிக் முட்டை முக்கியமானது. அது உள்ளே இருக்கும் முட்டைகளைப் பாதுகாக்கும் ஒரு குளம் போலச் செயல்பட்டது.

இதனால் அவை நீர் இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது மாறி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை உருவானது. இதுவே நிலப்பரப்பில் அவை ஆதிக்கம் செலுத்தக் காரணமாக இருந்தது” என்று கூறப்பட்டுள்ளது. வளைந்து கொடுக்கும் உத்திகள்: இப்போது பாம்புகள் மற்றும் பல்லிகளை எடுத்துக் கொண்டால் அவை குறிப்பிட்ட முறை என்று இல்லாமல் வளைந்து கொடுக்கும் இனப்பெருக்க உத்திகளைக் கையாளும்.

பாம்புகளை எடுத்துக் கொண்டால் சில வகை பாம்புகள் நேரடியாகக் குட்டி போடும், சில வகை பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இதைத் தான் EER – Extended Embryo Retention என்று குறிப்பிடுவார்கள். இது குறித்து ஆய்வாளர் ஜோசப் கீட்டிங் கூறுகையில், “EER இப்போது பல்லிகள் மற்றும் பாம்புகளில் பொதுவாக இருக்கிறது. அதாவது எந்த நேரம் இனப்பெருக்கத்திற்கு ஏற்றது என்பதைக் கண்டறிந்து அவை அதற்கேற்ப முட்டை அல்லது குட்டிகளை இவை ஈடும். இதுதான் EERஇல் இருக்கும் பெரிய அட்வான்டேஜ். பொதுவான வெப்பம், உணவு இருக்கும் காலத்தை உணர்ந்து தனது குட்டிகளைத் தாய் வெளியிடும்” என்றார்.

அதாவது முன்பு இருந்த அனைத்து உயிரினங்கள் குட்டி போட்டோ பால் கொடுத்துள்ளன. பின்னர் பரிணாம வளர்ச்சியில் சர்வைவல் யுக்தியாகவே சில குறிப்பிட்ட வகை முட்டை போட்டு குஞ்சு பொறிக்கும் முறைக்கு மாறியுள்ளன. இப்போதும் சர்வைவலை பொறுத்து பாம்பு, பல்லி போன்றவரை இரண்டும் செய்கிறது. இந்த ஆய்வு முடிவில் கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பதற்குத் துல்லியமான பதில் கிடைக்கவில்லை என்றாலும் கூட அதை ஆய்வாளர்கள் நெருங்கிவிட்டார்கள் எனச் சொல்லலாம்.

 

 

Previous Story

'பாலஸ்தீன்' சீன அதிரடி!

Next Story

காணாமல் போன கட்சி!