கோமாவுக்குப் போன தமிழர் உரிமை!

A Sri Lankan Tamil woman takes part in a ceremony at Mullaivaukkal on the outskirts of Jaffna on May 18, 2019. - Sri Lanka celebrates ending a protracted ethnic war 10 years ago on May 18 after a final show down, but for many Tamil civilians it is another day of reliving their trauma. (Photo by ISHARA S. KODIKARA / AFP)

நஜீப்

கோமா என்றாலே நீண்ட உரக்கம்தான். ஆனால் கோமா என்று நாம் ஒற்றை வார்த்தையில் சொன்னால் சிலர் இதனை எவ்வளவுதூரம் புரிந்து கொள்வார்கள் என்பதில் நமக்கு சந்தேகம். எனவேதான் நீண்ட உரக்கம் என்று வேறு சொல்லி இருக்கின்றோம். இலங்கையின் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகள் வேறு தமிழர்களின் இன ரீதியான அரசியல் பிரச்சினைகள் வேறு என்றுதான் நாம் நம்புகின்றோம்.

ஆனால் பொதுவாக அனைத்துத் தமிழ்த் தரப்பினரும்  இன்று இனப் பிரச்சினைகளை மறந்து வேறு விடயங்களில் தமது கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் என்று வந்தால்தான் இவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு சந்தைப்படுத்த தெருவுக்கு வருவார்கள்.

மக்களும் இவர்களுக்காக கோஷ்டி பிரிந்து பந்தல் போட்டுக் கொண்டு திரிவார்கள். இதுதான் தமிழ் மக்களின் சமகால அரசியலாக இருக்கின்றது. எனவே அரசியல் தலைமைகள் இந்த விவகாரத்தில் கோமா நிலையில் இருப்பதால் இனப்பிரச்சினை விவகாரத்தில் சிவில் சமூகத்திலிருந்து பலம் மிக்க அழுத்தக் குழுவென்றின் அவசியம் காலத்தின் தேவையாக இருக்கின்றது. அப்படி அமைந்தாலும் அரசியல் தலைமைத்துவங்களின் மண்டியிடுகின்ற ஒரு அமைப்பாக இது இருக்கக் கூடாது.

நன்றி:16.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இறையடி சேர்ந்த மாத்தளை சட்டத்தரணி பசீனா நபீல்!

Next Story

இரானிய ட்ரோன்கள்: யுக்ரேன் தலைநகர் கியவ் மீது ரஷ்யா நடத்திய நேரடி தாக்குதல் - 'காமிகேஸ்' எத்தனை ஆபத்தானது?