கோப்: அதிரடித் தகவல்கள்!

-நஜீப்-

தற்போது கோப் குழு அமர்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. அதில் சொல்லப்படுகின்ற பல தகவல்கள் அதிர்ச்சியான செய்திகளாக அமைந்திருக்கின்றன.

அங்கு கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் போது தமது சிபார்சுகளுக்கு முரணாகத்தான் மூன்று பேர் தீர்மானங்களை எடுத்தார்கள்.

அவர்களுக்குத்தான் இறுதி முடிவெடுக்கின்ற அதிகாரங்கள் இருந்தது. அதனால்தான் எமது சிபார்சுகளைக் கணக்கில் எடுக்கபடவில்லை என்று அதிகாரிகள் பகிரங்கமாக கோப் குழு முன் சாட்சி சொன்னார்கள். அதிகாரம் படைத்த மூவர் அடங்கிய குழுதான் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம்.

அங்கு கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஷ த சில்வா துறை தொடர்பான எந்த அறிவும் இல்லாத சமந்த குமாரசிங்ஹ என்பவர் யார்? அவர் இப்போது எங்கு இருக்கின்றார்? என்று கோப் குழுவிடம் கேட்டார் அர்ஷ.

பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடரும் என்று குறிப்பிடுகின்றார் கோப் குழுத் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத்.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 29.05.22

Previous Story

74 வயதில் O/L பரீட்சை எழுதிய சந்திரதாச!

Next Story

நீண்ட நாட்களுக்கு எரிவாயு இல்லை -லிட்ரோவின்