கோட்டா 24ம் திகதி நாட்டுக்கு வருகின்றார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக கூறியுள்ளார் என அவரது உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த  அளவுக்கு கோட்டாபயவுக்கு அரசியல் திறமையில்லை

கோட்டாபயவின் இலங்கை வருகை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள உதயங்க வீரதுங்க | Gotabaya Not Talented Politician

போர் நடைபெற்ற காலத்தில் நடந்ததாக கூறப்படும் மிக் விமான கொள்வனவு ஊழல் தொடர்பான விசாரணைக்காக இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு முன்னிலையான உதயங்க வீரதுங்க, அங்கியிருந்து வெளியேறும் போது ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச திறமையான அரசியல்வாதியல்ல.அவர் திறமையான நிர்வாக அதிகாரி. அரசியல்வாதி என்ற வகையில் மகிந்த ராஜபக்ச அளவுக்கு கோட்டாபயவுக்கு திறமையில்லை.

என்னை போன்று அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான பலர் இருக்கின்றனர். இவர்களுக்கு கோட்டாபய ராஜபக்ச நியாயத்தை நிறைவேற்றவில்லை. ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அது சரியா தவறா என்று எனக்கு தெரியாது. சில வார்த்தைகளை அவர் கூறியிருந்தால், அவருக்கு மரண தண்டனை கிடைத்திருக்காது. அவர் சுவிஸர்லாந்தில் தற்போது வாழ்ந்திருக்கலாம்.

கோட்டாபயவுக்கு ஆரம்பம் மறந்து போனது

கோட்டாபயவின் இலங்கை வருகை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள உதயங்க வீரதுங்க | Gotabaya Not Talented Politician

எனினும் கோட்டாபயவுக்கு ஆரம்பம் மறந்து போனது. தனது சகோதரனை மறந்து போனார். அவர் இலங்கைக்கு சீக்கிரம் வர வேண்டும். இலங்கை மக்கள் அவரை பழிவாங்க மாட்டார்கள். அவரை அன்பாக பார்த்துக்கொள்வார்கள்.

அவர் இலங்கைக்கு வர வேண்டும். அவர் நாட்டு சேவை செய்தவர். அவரிடம் இருந்த அடிவருடிகள் காரணமாக அவருக்கு நாட்டை விட்டு செல்ல நேரிட்டது. கோட்டாபய ராஜபக்ச எனது பெரியம்மாவின் புதல்வர்.

எனினும் மகிந்த ராஜபக்ச என்ற பாத்திரத்தின் குணம் சிறிய அளவுக் கூட கோட்டாபயவுக்கு இல்லை. அந்த இடத்தில் தான் அவருக்கு தவறியது.

மக்கள் அதனை புரிந்துக்கொண்டிருக்கவில்லை. அவர் என்னுடன் கதைப்பார். விரைவில் வருகிறார். 24 ஆம் திகதி வருகிறார். அவர் வந்து இலங்கைக்கு செவை செய்வார்.

அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட மாட்டார். மீண்டும் மக்கள் முட்டாளாக வேண்டியதில்லை. கோட்டாபய ராஜபக்ச 24 ஆம் திகதி இலங்கைக்கு வருவார். தீர்மானம் மாற்றப்படலாம்.

ஆனால்  அவர் இலங்கைக்கு வருகிறார் என்பதை இன்று பொறுப்புடன் கூறுகிறேன். உதயங்க முன்கூட்டியே கூறிவிட்டார் என பயணத்திட்டதை மாற்றினால் நான் செய்வதற்கு எதுவுமில்லை என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடந்த போராட்டங்கள் காரணமாக மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதன் பின்னர் ஊடகங்களில் கோட்டாபய ராஜபக்சவை கடுமையாக விமர்சித்து உதயங்க வீரதுங்க கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

உதயங்க வீரதுங்க ராஜபக்ச சகோதரர்களின் தாயாரது தங்கையின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

இலங்கை நடிகை: இந்திய தொழிலதிபரை மிரட்டி 910 கோடி பறித்த விவகாரம்! 

Next Story

லண்டன் வீதிகளில் உலாவும் துபாய் இளவரசர்