கோட்டா-ரணில் அமைச்சரவையை             நியமிப்பதில் நெருக்கடி!

புதிய அமைச்சரையில் பின்வருவோர் உள்ளடங்க இடமிருக்கின்றது. என்றாலும் ராஜபக்ஸாக்கள் விட்ட இடத்திலிருந்து அரசு அதே பாதையில் பயணிக்கும் என்பதால் பலர் அதில் இணைந்து கொள்ளத் தயங்குகின்றார்கள்.

இது ஒரு கைப்பொம்மை அரசு என்ற கருத்து சமூகத்தில் இருக்கின்றது. முதல் சுற்றில் ஜனாதிபதி ஜீ.ஆருக்கும்  பிரதமர் ரணிலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் அமைச்சரவையில் இடம் பெறக் கூடியவர்கள் பற்றிய பேசப்பட்டது.

இறுதி முடிவுகள் இது வரை எடுக்கப்படவில்லை. மஹிந்தவும், பசிலும்தான் இறுதி முடிவுகளை எடுப்பார்கள் அதற்கான அங்கிகாரம் அங்கிருந்துதான் வர வேண்டும் என்று நமக்குத் தகவல்கள் வருகின்றன.

ரணில் தலைமையிலான அமைச்சரவை கடம் கட்டமான நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம். மேலும் சஜித் அணியிலிருந்து குறைந்தது மூன்று பேரையாவது வளைத்துப் பிடிக்க முயற்சிககள் கடுமையாக நடக்கின்றன.

  1. தினேஷ் குனவர்தன
  2. அலி சப்ரி
  3. திலும் அமுனுகம
  4. பிரசன்ன ரணதுங்ஹ
  5. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
  6. அகில விராஜ்
  7. ரங்கே பண்டார
  8. வஜிர அபேவர்தன
  9. ருவன் விஜேவர்தன
  10. தயா கமகே
  11. ரவூப் ஹக்கீம் அல்லது நசீர் அஹமட்
  12. ரோஹித்த அபேகுனவர்தன
  13. ஹரின் பர்ணந்து
  14. டக்லஸ் தேவானந்த
  15. சுமந்திரன்
  16. பவித்தரா வன்னியாரச்சி
  17. சசேந்திர ராஜபக்ஸ
  18. எஸ். சந்திர சேன
  19. நிமல் சிரிபால டி சில்வா
  20. ஜீவன் தொண்டமான்
  21. கனக ஹேரத்
  22. ரமேஷ் பத்திரன
  23. பேரசிரியர் சன்ன ஜயசுமன

போன்றவர்களின் நாமங்களை ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துறையாடி இருக்கின்றார்கள். மொட்டு அணிக்கு வெளியே இருப்பவர்களை பேசிப் பார்க்கின்ற பொறுப்பை ரணில் ஏற்றுக் கொண்டாலும், இந்த செய்தியைத் தயாரிக்கின்ற நேரம் வரை அதில் முன்னேற்றங்கள் தெரியவில்லை.

பல மாதங்களுக்கு முன்னர் ரணில் பிரதமரானால் வந்து ஒத்துழைக்கின்றோம் என்று சொன்ன பலர் மே 9 ம் திகதிய நிகழ்வுக்கப் பின்னரான மக்கள் எழுர்சிக்குப் பயந்து தற்போது பின்வாங்கி விட்டார்கள்.

எனவே நாம் மேற்சொன்னவர்களில்  பலர் ரணிலுடன் நல்லுறவிலும் டீல் அரசியலிலும் நெருக்கமாக இருந்தாலும் இந்த அமைச்சரவையில் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று  நம்பலாம்.

அவர்களில் பலருடன் ரணில் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி இருக்கின்றார். ஆனால் பதில்கள் திருப்தியாக இல்லை என்றும் தெரிகின்றது. இப்போது பெரும்பான்மையை உறுதிப்படுத்தி விட்டு அமைச்சுப் பற்றிய முடிவுகளை எடுக்கலாம் என்று ஒரு கதையும் வருகின்றது.

Previous Story

காசில் வரும் பெரும்பான்மை

Next Story

றோ அமைப்பின் பாதுகாப்பில் மகிந்த!