கோட்டா ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் 51 வாகனங்கள் மாயம்

இந்த வாகனங்களின் பெறுமதி கூட மதிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் 51 வாகனங்கள் மாயம் | Gotabaya Rajapaksa Government Vehicles Scam

தேசிய கணக்காய்வு ஆணையாளர்

இதேவேளை, கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில், ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான 53 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்கள், ஆலயங்கள், மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 2022 ஆம் ஆண்டில் 27 வாகனங்களுக்காக ஜனாதிபதி செயலகத்தினால் 137 இலட்சம் ரூபா பராமரிப்புச் செலவீனமாக அலுவலகம் செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் 51 வாகனங்கள் மாயம் | Gotabaya Rajapaksa Government Vehicles Scam

மேலும் ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் மீளப்பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான வாகனங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட போதிலும், அந்த வாகனங்கள் முறையான அனுமதியின் கீழ் உரிய முறையில் மாற்றப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை காட்டுகிறது.

Previous Story

'வாக்னர்' கிளர்ச்சி : மாஸ்கோவை வெளியேறினாரா புதின்? 

Next Story

“போராடித்தான் தேர்தலைப் பெறவேண்டும்”