கோட்டா அதிரடி சுசில்OUT

பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிரடியாக பதவி நீக்கியிருந்தார்.

சுசில் பிரேமஜயந்த , அண்மைய நாட்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதனையடுத்து அவர் இன்று பதவி நீக்கப்பட்டிருந்த நிலையில் அவர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சுசில் பதிலடி

நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி விலகல் தொடர்பில் கவலையடையவில்லை என்றும், இனி என் தொழிலை செய்வேன் என பதவி விலக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கூறுகையில்,

பதவி விலகல் பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்ல. ஊடகங்கள் ஊடாகவே அறிந்தேன். நான் 2000 ஆம் ஆண்டு அமைச்சு பதவியை வகித்தேன்.

அதோடு மூன்று ஜனாதிபதிகளின்கீழ் வேலை செய்துள்ளேன். நான் சட்டத்தரணி, இனி அந்த தொழிலை முன்னெடுப்பேன். தகுதியானவர்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். தகைமையற்றவர்களுக்கு கல்வியின் பெறுமதி தெரியாது என  சுசில் பிரேமஜயந்த  கூறியுள்ளார்.

சுசில் பிரேமஜயந்த அண்மைய காலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.  அத்துடன் நாட்டின் பிரச்சினைகள் தீர்க்க முடியாத அளவுக்கு புரையோடி போயுள்ளதாகவும் வேறு ஒரு அணியிடம் நாட்டை ஒப்படைத்தாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் சுசில் பிரேமஜயந்த கூறியிருந்த நிலையில் அவர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுசில் பிரேமஜயந்த வகித்து வந்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு பதவி எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டலஸ் கவலை

 ஜனாதிபதி நினைத்தால் த ன்னையும் பதவி நீக்கம் செய்யலாம் என்றும், அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளதாக தெரிவித்த அமைச்சர் டலஸ், இது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் கூறினார்.

அதோடு சுசில் பிரேமஜயந்த தனது நண்பர் என்றும் அவரின் பதவி நீக்கம் தொடர்பில் நானும் கவலை அடைவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இறைய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது ‘அரசை விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார். அரசை விமர்சிப்பதற்கு ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்குத் தடையா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நான் இந்த ஊடக சந்திப்புக்கு வரும் வழியில்தான் அது தொடர்பில் அறிந்தேன். அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஜனாதிபதி அந்த முடிவை எடுத்துள்ளார். இது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

சுசில் பிரேமஜயந்த எனது நண்பர். அவரின் பதவி நீக்கம் தொடர்பில் நானும் கவலை அடைகின்றேன். ஜனாதிபதி நினைத்தால் என்னையும் நீக்கலாம்.

அரசை விமர்சித்ததால்தான் அவர் நீக்கப்பட்டார் எனக் கூறப்படுவதை ஏற்கமுடியாது என தெரிவித்த அமைச்சர் டலஸ், தற்போதைய அமைச்சரவையில் சுதந்திரம் இருக்கின்றதாகவும் உதய கம்மன்பில போன்றவர்கள் நீதிமன்றத்தைக்கூட நாடியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Previous Story

பஷில்  திடீர் சலுகைள்: நிபுணர்கள் கருத்து ?

Next Story

சாப்பாட்டுக்கு குழந்தை விற்கும் ஆப்.