நஜீப்
நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல்
ஜேவிபி.காரர்கள் என்றால் பிச்சைக்காரர்களாகத்தன் இருக்கனும். அவர்கள் மெழுகுவர்த்தியாக எரித்து அடுத்தவனுக்கு வெளிச்சம் கொடுத்து விட்டு தான் அழிந்து போக வேண்டும். இப்படி ஒரு பார்வை இருக்கின்றது.

இதில் பெரும்பாலானோர் பிற்போக்குவாத வலதுசாரிகள்தான். ஆனால் ஏங்கல்ஸ் நமது நாட்டில் செல்வாக்கான இடதுசாரிகளான என்.எம் பெரோ, கொல்வின் ஆர்டி சில்வா போன்றவர்கள் நிலப் பிரபுக்கள்-செல்வந்தர்கள்.
உலகில் பணக்கார அரசியல் தலைவர்களில் முதலிடத்தில் ரஸ்யா அதிபர் புட்டின். அவர் சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர்கள். (ஒரு பில்லியன் என்பது 317,917,900. கோடி) அமைச்சர் லால் காந்த சொத்துக்களை மிகைப்படுத்தி செய்தி சொன்ன ஒரு தனியார் ஊடகம் சிக்கலில் மாட்டிக் கொண்டது.

லால்காந்த அந்த நிறுவனத்திடம் நஸ்டஈடு கோரி வழக்குத்தாக்கல். இதில் லால் ஜெயித்தால் அவர் மில்லியனர்தான். ஜேவிபி. யில் பல கோடிஸ்வரர்கள் இருக்கின்றார்கள். இதில் அதிசயமே கிடையாது.



