கொழும்பு விரைகிறார் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, 28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் 5 ஆவது மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கையை பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், அண்டை நாடான இந்தியா அவசர உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

காலாவதியான உணவை புசிக்காதீர்!

Next Story

பசில் பகிரங்கப்படுத்ததை அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!