கொழும்பில் சியோனிட்டுக்களின் ஜூம்மா பேருரை

-நஜீப் பின் கபூர்-

Mossad's 'moderate Muslim' scorecard | Spy Cables | Al Jazeera

சில தினங்களுக்கு முன்னர் உலகம் பூராவிலும் ஆயிரக்கணக்கான மொசாட் ஆலிம்கள் இருப்பது பற்றி நாம் ஒரு தகவலில் சொல்லி இருந்தோம்.

அந்த செய்தியை உலகம்பூராவிலும் இலட்சக்கணக்கானவர்கள் பார்த்திருந்தார்கள். என்றாலும் இப்படி எல்லாம் நடக்குமா என்று சந்தேகிப்போர் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கூட ஒரு சியோனிச உளவாளி பத்து வருடங்களுக்கு மேல் பள்ளிவாயிலில் இமாமாக இருந்தது பற்றியும், படுகொலை செய்யப்பட்ட ஈரானிய ஜனாதிபதி ரைசி வீட்டிற்கு ஒரு பெண் ஊடகவியலாளர் அடிக்கடி வந்து ஒரு குடும்ப உறுப்பினர் போல இருந்து வந்தார்.

ரைசி கொலை செய்யப்பட சில தினங்களுக்கு முன்னர் அவர் பாதுகாப்பாக அங்கிருந்து இஸ்ரேலுக்கு தப்பிய செய்தியையும் நாம் சொல்லி இருந்தோம். இவை முழு உலகமும் அறிந்த கதை. ஈரானிலே அவர்கள் இப்படி எல்லாம் செயல்பட முடியுமாக இருந்திருக்கின்றது.

Mossad 'Spy' Was Employed By Khamenei? 'Black Lady' Who Converted To Islam Changed Fate Of Iran War?

இந்தப் பின்னணியில் தற்போது ஈரானுக்கும் சீயாக்களுக்கும் எதிராக நாம் பெயரை உச்சரிக்க விரும்பாத ஒரு ஆலிம் 03.04.2026  கொழும்பு-பள்ளிவாயிலில் ஒரு ஜூம்மாப் பரப்புரையை செய்த போது அங்கு பெரும் ரகளை ஏற்பட்டது. மக்கள் எழுந்து நின்று கேள்வி எழுப்பிய போது குறிப்பிட்ட நபர் பின் கதவால் தப்பியோடியதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆலிம்கள் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் மத்தியில் பணத்துக்காக கோடாரிக்காம்புகள் சமூகத்தில் பிளவுகளை உண்டுபண்ணி சியோனிஸ்டுக்களுக்கு உதவி வருகின்றனர்.

FBI Informant's Role in Upcoming SCOTUS Case on Post-9/11 Surveillance of Muslims

சில தனவந்தர்கர்களை முஸ்லிம்கள் மத்தியில் வளர்த்து அவர்கள் ஊடகவும் சியோனிஸ்டுக்கள் முஸ்லிம்களுக்கு சமூகப் பணிபுரிகின்ற ஒரு ஏற்பாடும் நடைமுறையில் இருக்கின்றது.

இவற்றை எல்லாம் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளும் போது சியோனிட்டுக்கள் தங்களது இலக்கை கனிசமான தூரம் கடந்திருப்பார்கள்-முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் அழிவை உண்டு பண்ணி இருப்பார்கள்.

Family of Islamic State hostage denies he is a Mossad spy | The Times of Israel

முக்கிய குறிப்பு:

1.உலகப் புகழ் பெற்ற மேதை  யூசுப் கர்ளாவி சீயாக்களை வழிகெட்ட பிரிவினராக நான் ஒரு போதும் உச்சரிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தார். அவர் ஒரு சுன்னி முஸ்லிம்.

2.துருக்கிய தற்போதய அதிபர் எர்துவான் கூட சில தினங்களுக்கு முன்னர் இந்த சீயா-சுன்னி பிளவுகள் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. அதனைப் பெரிய இசுவாக எடுத்துக் கொண்டு முஸ்லிம்களை பிளவுபடுத்த வேண்டாம் என்று பகிரங்கமாகக் கேட்டிருந்தார். அவரும் சுன்னி முஸ்லிம்.

3.போர் துவக்க நாளிலே கொல்லப்பட்ட ஈரான் ஆன்மீகத் தலைவர் அலி கமெய்ணி இந்த சீயா-சுன்னி பிளவுகள் துவக்கத்திலே களைப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்று ஒரு சமயம் சொல்லி இருந்தார்.

4.வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும் இந்த சீயா சுன்னி பிளவுகள் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. இது இடையில் அரசியல் தலைமைத்துவம் தொடர்பான ஒரு முரண்பாடு.

5.இந்த சீயா சுன்னி பிளவுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக மொசாட் ஆண்டு தோறும் பில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்து வருகிறது.

6.வளைகுடா நாடுகளில் இருக்கின்ற அரபு ஆட்சியாளர்களுக்கு தமது அரசியல் இருப்புக்காக இந்தப் பிளவை பாதுகாத்து இஸ்ரேலுக்கு உதவிபுரிய வேண்டிய தேவையும் இதில்  இருக்கின்றது.

7.இதனால் அந்த ஆட்சியாளர்களின் பணமும் இந்த பிரிவிணையை வளர்க்க உலகம் பூராவிலும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

அவர்களின் முகவர்களும் இமாம்களும் தான் இது போன்ற செயல்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சர்ச்சைக்குரிய ஜூம்மாப் பரப்புரை பற்றி இது வரை ஜம்மியத்துல் உலமா சபையிடம் இருந்து எந்தக் கருத்துக்களும் வரவில்லை. அனேகமாக அவர்கள் மௌனத்தைதான் தமது பதிலாக தந்து கொண்டிருப்பார்கள், அல்லது அவர் தமது அணியைச் சேராதவர் என்று கூட சொல்லி தப்பிக்க முனையக்கூடும்.?

Raisi and the Jewish Convert to Islam | Aish

எச்சரிக்கை:உங்கள் வட்டாரங்கள்-கிராமங்களில் கூட பல்வேறு பொதுப்பணிகள் என்ற பெயர்களில் இந்த சியோனிச-அரபு பணம் விநியோகிக்கப்பட்டு செலவு செய்யப்பட்டு வருகின்றது என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். பாமர மக்கள் இது போன்ற சதிகளை ஒரு போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

முகவர்கள் கதறுவது ஏன்?

அமெரிக்க-இஸ்ரேல் அநீயாயமாக ஈரானைத் தாக்கிய போது அனைத்துலக முஸ்லிம்களும் சீயா-சுன்னி பேதங்களை மறந்து ஈரானுக்கு ஆதரவாக குரல் எழுப்பத்துவங்கினார்கள்.

இதனால் சியோனிட்டுக்களுக்கும் அவர்களின் முகவர்களுக்கும் இது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இந்த வலியால்தான் தமது பிழைப்புக்கு-வருமானத்துக்கு ஆப்பு வந்து விட்டது என்பதனால்; அவர்கள் வேதனையால் கதறுகின்றார்கள்.

 

Previous Story

රටම කතාවෙන නිවස ගැන ලාල් කියයි ! ඒ කාලෙ හිටපු විදියට දැන් ඉන්න ඕන නෑ

Next Story

போர்-கிளர்ச்சி திண்டாடுகின்ற ஐந்து அரசுகள்!