கொரோனா-2 21 இலட்சம் மரணங்கள்! நாடு அதிர்வு

யூசுப் என் யூனுஸ்

1918களிலும் இரண்டம் சுற்றில்தான் அதிகளவு மரணங்கள்
கானல் நீர் போல் காட்டப்படுகின்ற கொரோனா மருந்துகள்
இந்தியத் தொழிலாளர்; அங்கு வேலை என்பது அபான்டம்!
கொரோனா இன்னும் 2 வருடங்கள் வரை எம்முடன் வாழும்
பிரேன்டிக்ஸ் நிறுவனம் மீது எதிரணி உறுப்பினர் அவதூரு

கொரோனா நாட்டுக்குள் புகுந்த ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு 100 வருடங்களுக்கு ஒருமுறை இப்படியான பேரழிவுகள் இதற்கு முன்னரும் உலகில் நடந்து வந்திருக்கின்றன. கடைசியாக 1918 களில் ஸ்பானிஸ் வைரஸ் நோய்த் தொற்றால் ஒரு இலட்சத்தி எழுபத்தி ஐந்து ஆயிரம் பேர்வரை நமது நாட்டில் இறந்திருக்கின்றார்கள் என்றும் அந்த நோய்த் தொற்று அன்று மூன்று வருடங்கள் வரை உலகில் தாண்டவம் ஆடி இருந்தது என்ற கதைகளையும் நாம் வாசகர்களுக்குச் சொல்லி இருந்தோம்.

நமது நாடு துவக்க காலத்தில் மிகவும் வெற்றிகரமாக கொரோனாவைக் கட்டுப்படுத்தி உலகிற்கு தனது வல்லமையைக் காட்சிப்படுத்தி இருந்தது. இது ஜனாதிபதி ஜீ.ஆர். திறமையா? அல்லது கடவுள் காட்டியா கருனையா என்று ஒரு கட்டுரையில் நாம் கேட்டிருந்தோம். ஆனால் இப்போது அணை உடைந்த வெள்ளம் போல் இது அட்டகாசம் பண்ணத் துவங்கி இருக்கின்றது. அன்று நாளுக்கு ஒன்று இரண்டு ஐந்து ஆறு என்றிருந்த தொற்று இன்று கொத்துக் கொத்தாக அல்லது அலை அலையாக கண்டறியப்பட்டு வருகின்றது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக தொழில்பார்த்த ஒரு பெண்ணிடம் கண்டறியப்பட்ட இந்தத் தொற்று காட்டுத் தீ போல் முழு நாட்டையுமே இன்று கதிகலங்க வைத்ததுள்ளது. முதல் சுற்றில் நாட்டுக்குள் கொரோனா ஊடூருவிய போது நாட்டில் பெரும் அச்சமும் பயமும் இருந்தது. ஆனால் அந்தக் கொரோனா நம்மை விளிப்படைய வந்தது போல் எச்சரித்து விட்டு போய் விட்டது. அல்லது தலைமறைவாக இருந்தது. நிலமை சீராகி விட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு தமது பணிகளைத் துவங்கிய நிலையில்தான் அது தனது அதிரடி ஆட்டத்தை இப்போது காட்டத்துவங்கி இருக்கின்றது.

ஏற்கெனவே வந்த கொரோனா பெரிய உயிர் அழிவுகளை ஏற்படுத்தா விட்டாலும் மிகப் பெரிய பொருளாதார அழிவை நாட்டில் உண்டு பண்ணி விட்டது. இதிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப ஆட்சியாளர்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தது போதே கொரேனா அட்டகாசமாக தனது அதிரடி ஆட்டத்தை துவக்கி இருக்கின்றது. 100 வருடங்களுக்கு முன்னர் நடந்த பேரழிவிலும் இந்த இரண்டாம் சுற்றில்தான் அதிக உயிர்ப்பலிகள் உலகில் நடந்தது.

உலகில் இது வரை 36270000 பேருக்கு கொரோனா தொற்றி இருக்கின்றது. இதில் 1063000 பேர் மரணித்திருக்கின்றார்கள். அமெரிக்காவே இன்னும் கொரோனா நோய் தொற்றில் முன்னணியில் இருந்து வருகின்றது. தொற்றாளர்கள் 7579513. மரணங்கள் 211910.. எல்லோரையும் முந்திக் கொண்டு இப்போது இந்திய இரண்டாம் இடத்துக்கு வந்து விட்டது. அங்கு 6900000 வரை நோயாளர்கள். மரணங்கள் 106000. பிரேசில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. கொரோனா துவங்கிய சீனா 48ம் இடத்துக்குப் பின்தள்ளி தன்னை இதுவரை சுதாகரித்துக் கொண்டு வெற்றிகாமாக கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நாடு என்று வகையில் முதலாம் இடத்தில் இருக்கின்றது. அங்கு இது வரை 85489 பேருக்க நோய் தெற்றியது. அதில் 4634 பேர் மட்டுமே மரணித்திருக்கின்றார்கள்.

இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாக மார்தட்டிக் கொண்டது. ஆனால் இடையில் கோட்டை விட்டுவிட்டதோ என்று சொல்லுமளவுக்கு இப்போது இங்கு நிலமை மாறி விட்டது. இலங்கையில் இந்தக் கட்டுரையைத் தயார் செய்து கொண்டிருக்கும் போது நோய்த் தொற்றாலர்கள் 4300 தாண்டி விட்டது. மரணித்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக இருந்தாலும் இந்த சுற்றில் இறப்பு வேகம் அதிகரிக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. கடந்த புதன் கிழமை புதிதாக ஒரு மரணம் நிகழ்ந்திருக்கின்றது. முன்பு இறந்தவருக்குக் கொரோனா என்றார்கள் இப்போது இல்லை அது மரடைப்பு என்கின்றார்கள். ஆனால் அடக்கம் கொரோனா மரணம் போல நடந்திருக்கின்ற நமது அவதானப்படி கொரோனா இன்னும் இரு வருடங்கள் வரை எம்முடனே வாழும் என்று நாம் நம்புகின்றோம்.

1918களில் வைத்திய வசதிகள் இன்றுடன் ஒப்பிடும் போது மிகவும் பின் தங்கி இருந்தது. ஆனால் விஞ்ஞானத்தின் உச்சியில் நாம் கொடி கட்டி விட்டோம். செவ்வாய்க்குக் கூடப் பயணங்களைத் துவங்ங்கி இருக்கின்றோம் என்று சொல்லிக் கொள்கின்ற இந்தக் கால கட்டத்தில் கொரோனாவை மனிதனால் கட்டுக்குள் கொண்டுவரா முடியாமல் இருப்பது இது இறைசக்தியின் வெளிப்பாடகத்தான் நாம் கருத வேண்டி இருக்கின்றது. எனவே வையகம் மனித கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு இது நல்ல ஒரு உதாரணம்.

குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்து ஒரு தூதுக்குழு வந்து போய் இருக்கின்றது என்று சில ஊடகங்கள் கதை பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இராணுவத் தளபதியோ அப்படி எதுவுமே நடக்கவில்லை அது ஒரு கட்டுக்கதை என்று அடித்துச் சொல்லி இருக்கின்றார். இந்த நிறுவனம் 1969 துவக்கப்பட்டிருக்கின்றது. இதன் நிறுவனர் எம்.எச். ஒமர். தற்போது இந்த நிறுவனத்துக்கு அஷ;ரப் ஒமர் என்பவர் தலைமைத்துவம் கொடுக்கின்றார். இதில் பணியற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் போல் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பிட்ட பிரேன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஒரு முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமாக இருப்பதால் இப்படி கதை கட்டி வருகின்றார்களோ என்னவோ என்ற ஒரு சந்தேகமும் இருக்கின்றது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிப் பாரளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார வழக்கம் போல் இனவாதமகப் பேசி வருகின்றார். அவரது இந்தக் கருத்துக்களுடன் தன் உடன்படப்போவதில்லை என்று அதே கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர் அர்ஷத டி சில்வா இந்த நிறுவனம் சார்பாகக் குரல் கொடுத்தார்.

ஆளும் தரப்பு அமைச்சர் பந்துல குனவர்தனவும் மனுச நாணயக்காரதான் இப்படியான குற்றச்சாட்டுக்களை இந்த நிறுவனத்தின் மீது சொல்லி வருகின்றார் அரசாங்கமோ பாதுகாப்புத் துறையினரே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நிலைப்பாட்டில் இல்லை. நணயக்காரவின் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறானது என்று பதில் கொடுத்திருந்தார் அமைச்சர் பந்துல குணவர்தன. குறிப்பிட்ட நிருவாகமும் அப்படி இந்தியர்கள் எவரும் இங்கு வந்து போகவில்லை என்று அறிக்கை விட்டிருக்கின்றது. அப்படியுமே அவர்கள் வந்திருக்கின்றார்கள் என்று நாம் ஒரு கற்பனைக்கு எடுத்துக் கொண்டாலும் அவர்கள் எப்படி தடுப்பு முகாமுக்கு செல்லாது அங்கு போனார்கள் என்றுயோசித்தால் பாதுகாப்புத் துறை அங்கு கோட்டை விட்டு விட்டது என்றுதானே அர்த்தம்.

நாடு பூராவிலுமுள்ள இந்த பிரேன்டிக் ஆடைத் தொழிற்சாலைகளில் 65000 பேரளவில் வேலை செய்கின்றார்கள் இதுதான் நாட்டில் முன்னணி ஆடைத் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
பேரின ஊடகங்கள் இது தொடர்பாக சில கேள்விகளை எழுப்புகின்றன குறிப்பிட்ட பிரேன்டிக் தொழிற்சாலைக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவு சந்தையில் கேள்விகள் இருந்ததால் அந்த நிறுவனம் இந்தியாவிலுள்ள தனது தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வந்திருந்தார்கள். அவர்களை 7 நாட்களுக்கு மட்டும் தடுப்பு முகமில் வைத்து பணிக்கு அமர்த்தி விட்டார்கள் என்ற ஒரு கதையும் சொல்லப்படுகின்றது. அப்படி இந்தியர்கள் அங்கு வந்து பணியாற்றி இருந்தால் சக தொழிலாளிகளுக்கு அது தெரிய வந்திருக்க வேண்டுமே என்று நாம் கேள்வி எழுப்ப முடியும்.

இந்தியாவில் உள்ள தனது தொழிற்சாலையில் வேலை செய்கின்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யூ.எல். 1159ல் விமானம் மூலம் இந்தியாவிலுள்ள விசாக்கப்பட்டினத்தில் இருந்து இங்கு வந்திருக்கின்றார்கள். 60 பேர் முறைப்படி இங்கு வந்தார்கள். இதனை அந்த விமான நிறுவனமும் உறுதி செய்கின்றது. அவர்கள் நாட்டிலுள்ள விதிகள் படிமுகாம்களில் தங்கி ஏழு நாள் தங்களது இருப்பிடங்களில் தனிப்படுத்தளையும் பூர்த்தி செய்திருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நாங்கள் இங்கு தொழிலுக்கு அமர்த்திக் கொள்ளவும் இல்லை அதற்கான தேவைகள் ஏற்படவுமில்லை என்று அந்த நிறுவனம் தரப்பில் கூறப்படுகின்றது. இதனை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் உறுதி செய்கின்றார்.

இல்லை மேலும் இரு விமானங்களில் இந்தியாவிலிருந்து துணிவகைகளும் ஆட்களும் தொழிநுட்பவியலாளர்களும் எடுத்து வரப்பட்டிருக்கின்றார்கள் என்று ஒரு கருத்தும் சொல்லப்படுக்கின்றது. அத்துடன் முன்பு வந்த 60 பேருடைய தனிமைப்படுத்தல் காலம் இந்த மாதம் ஆறாம் திகதிதான் நிறைவடைக்கின்றது. அதற்கு முன்னர் எப்படி இவர்கள் முறையாக சுகாதார விதிகளைக் கடைப்பிடித்தார்கள் என்று சொல்ல முடியும். இவர்கள் தனியார் வைத்திய பரிசோதனைகளை மடடுமே செய்து கொண்டிருந்தார்கள் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் விவாதங்கள் நடந்து வருகின்றது.

ஆனால் இதிலுள்ள மர்மம் என்னவென்றால் குறிப்பிட்ட பெண் தொழிலாளிக்கு எப்படி கொரோனா தெற்றியது என்பதுதான்.? தனக்கு முன்னரும் இந்த கொரோனா அறிகுறியுடன் பலபேர் இங்கு இருந்தார்கள் என்று அந்தப் பெண் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்.எனவே கருத்துக்கள் ஒன்றுக் கொன்று முரனாக இருக்கின்றது.

இப்போது இந்த நிறுவனத்தில் தொழில் பார்த்தவர்கள் வந்து போனதால் 16 மாவட்டங்கள் ஏறக்குறை நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு மாவட்டங்களுக்கு கொரோனா காவிச் செல்லப்பட்டிருக்கின்றது. இதனால் அதனுடன் தொடர்புடைய 1200 பேர்வரை இதுவரை இந்த கொரோனா அலை இரண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றார்கள். இது வரை இந்த வைரஸ் அளவு 3-4 வரையில் இருந்தது. இப்போது அது 5 வரை உயர் மட்டத்தில் இருக்கின்றது. அதனால் நோய் காவுகின்ற வேகம் மிகவும் உயர் மட்டத்தில் இருக்கின்றது. இது மிகவும் அவதானமும் ஆபத்தானதுமான ஒரு நிலை. மேலும் பிரேன்டிக்ஸ் வெலிசரை தொழிற்சாலையில் பணியாற்றும் 19 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது என ஊடகங்களில் செய்தி வந்திருக்கின்றது.

முதல் முறையாக வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றி இருக்கின்றது. பிரேன்டிக்ஸ் ஆடைத் தொழிலாளர்கள் மருந்து எடுப்பதற்கு இவரிடம் வந்து போனதால்தான் அவருக்கு நோய் தொற்றி இருக்கின்றது. வைத்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வதால் பலர் தங்களது கிளினிக்குகளை மூடி இருக்கின்றர்கள். இதனால் நோயாளிகள் பலத்த சிரமத்துக்கு இப்போது ஆளாகி வருகின்றார்கள்.இதற்கிடையில் கடந்த புதன் கிழமை நடந்த கொரோனா பற்றிய ஊடகச் சந்திப்பில் வைத்தியர் ஒருவர் மக்கள் அவதானமாக நடந்து கொள்ளவிட்டால் நமது சனத் தொiயில் 5-10 சதவீதத்துக்கும் இடைப்பட்டவர்களுக்கு மரணம் சம்பவிக்கலாம் என்று எச்சரித்திருந்தார்.

அவரது அந்தக் கணிப்பு சரியாக இருந்தால் நமது பிரதேசங்களில் வாழ்கின்ற 100 பேரில் 5-10 சதவீதமானவர்களுக்கு உயிர் ஆபத்த இருக்கின்றது. மொத்த சனத் தெகையில் இதனை நாம் பார்த்தால் நாட்டில் 2 கோடி 15 இலட்சம் வரையில் சனத் தெகை இருக்கின்றது. ஐந்து சத வீதம் என்றால் 1075000 (ஒரு மில்லியன்) பேரும் இது 10 வீதம் என்றால் 2150000 (இரு மில்லியன்) பேருக்கும் உயிராபத்து இருக்கின்றது. 1918 ல் நோய் தொற்றில் நமது நாட்டில் நடந்த மரணங்களுடன் ஒப்பு நோக்கும் போது அவரது கணக்கு தவறாக இருக்கும் என்றும் வாதிட முடியாது. நாடே மரண வீடாகும் ஆபாயம் இருக்கின்றது. எனவே மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டி இருக்கின்றது என்பதனை நாம் சுட்டிக் காட்டுகின்றோம். மேலும் 1918 நோய்த் தெற்றில் அதிகமாக நடுத்தர வயதுக்காரர்களே மரணமானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் எம்ஆர்ஐ யின் பணிப்பாளர் டாக்டர் ஜயருவன் பண்டார பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார். இவர் மிகவும் சிறந்த நிருவாகி. கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் சிறப்பான பங்களிப்புச் செய்து வைத்தியத்துறை மேம்பாட்டிற்றகா உழைத்தவரும் கூட. இவர் பிரதமர் எம். ஆருக்கு மிகவும் விசுவாசமானவர் கடந்த காலங்களில் ஆளும் தரப்புக்கு நெருக்கமான இருந்தவர். அவர் மீதான நடவடிக்கையை தாதிகள் சங்கத் தலைவர் ஆனந்த முறுத்தெட்டுவே தேரர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றார்.

இவர் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுடன் முரன்பாடான நிலைப்பாட்டில் இருந்தார். கொரோன கட்டுக்குள் வந்து விட்டது என்ற அரசாங்கத்தின் பரப்புரைகளை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்று அவர் வஹித்த பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றார். இது பற்றி நான் பிரதமரிடமும் சுகாதார அமைச்சரிடம் கேட்டேன் அவர்கள் தமக்கு எதுவுமே தெரியாது என்று கூறுகின்றார்கள். இது புதினமான ஒரு அரசாங்கமாக இருக்கின்றது என்று தனது ஆதங்கத்தை ஊடகங்கள் முன் கொட்டினார் தேரர்.

கடந்த அரசாங்கத்தில் இவர் ராஜபக்ஸ விசுவாசியாக இருந்த போதும் அமைச்சர் ரஜித இவரை உயர் பதவியில் அமைர்த்தி இருந்தார் இதனால் அப்போதய சுகாதரா அமைச்சர் ராஜிதவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் நெருக்கடிகளும் வந்தது.

இலங்கைப் பெருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஆடைத் தொழிற்சாலைகளை கொரோனா தாக்கத் துவங்கி இருப்பது மிகவும் ஆபத்தானது. நமது தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் ஆடைகளை நாடுகள் கொள்வனவு செய்வதற்கு பின்னடிக்குவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அப்படி ஒரு நிலை வந்தால் மக்கள் மண்ணைத்தான் உண்ண வேண்டி நிலை வரும்.

இதற்கிடையில் இந்த வருடம் இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று உலக சுகாதரார அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. பல நாடுகள் இதற்கான மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கி இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன. ஆனால் ரஸ்யா மட்டும் ஸ்புட்னிக்-வி என்ற மருந்தை உற்பத்தி செய்துள்ளது. இதில் பல குறைபாடுகள் இருப்பதாக சிலர் விமர்சனங்களைச் செய்தாலும் ரஸ்யா தனது உற்பத்தியைத் தொடர்கின்றது. இது அமெரிக்க சார்பு ஊடகங்களின் கொச்சைப்படுத்தும் செயல் என்று ரஸ்யா கூறுகின்றது. ஒன்பது வகையான கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரீசோதனையில் இருக்கின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் திட்டமிட்ட படி பரீட்சைகள் நடக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். அதன் படி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை 11ம் திகதியும் உயர்தரப் பரீட்சை 12ம் திகதியும் ஆரம்பமாகும் என்று அறிவித்திருக்கின்றார். என்றாலும் கொரேனா இலங்கை பரீட்சைத் திணைக்களத்துக்கும் பல புதிய சவால்களை இந்த முறை கொடுக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

மேலும் போக்கு வரத்துக்களின் போதும் வணக்க வழிபாடுகளின் போதும் மிகவும் அவதானமாகவும் எண்ணிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. நிலமை சீராகி விட்டது என்ற எண்ணத்தில் மக்கள் வழக்கமாக விழாக்களையும் வைபவங்களையும் நடாத்தத் திட்டமிட்டிருந்தார்கள் கொரோன 2ம் கட்ட அலையால் அவர்கள் இப்போது பெரும் அசௌகரிகங்களுக்கு இலக்கி இருக்கின்றார்கள். இது இந்தக் கட்டுரையை எழுதுக்கின்ற நேர நிலை. நாளை அடுத்த மணி நேரம் எண்ண நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

எச்சரிக்கை! கண்டியவர்களே சிந்தியுங்கள!;

Next Story

20 கதை முடிந்தது! கொனோவும் இதற்கு ஆதரவு!