கொரோனா தொற்றுக்குப் பின் சாப்பிட உகந்த உணவு?

கொரோனா தொற்றுக்குப்பின் caffeine, ஆல்கஹால், சர்க்கரை மற்றும் ஜீரணிக்க கடினமாக உணவுகளைத் தவிர்ப்பது குடல் ஆரோக்கியத்தை திரும்பப்பெற்றுக்கொள்வதற்கு நல்லது என்கிறார் அவுஸ்திரேலிய உணவியலாளர் ஒருவர்.

குடல்தான் உடல் நலனின் மையப்புள்ளி என்று கூறும் அவுஸ்திரேலிய உணவியலாளரான Lee Holmes, கொரோனா தொற்றுக்குப் பின், குடல் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருக்கும் என்கிறார்.

ஆகவே, கொரோனா தொற்றுக்குப் பின், சில உணவு வகைகளுக்கு தற்காலிகமாக விடைகொடுக்கவேண்டும் என்கிறார் அவர். குறிப்பாக, சர்க்கரை மற்றும் ஆல்கஹால் அதிகம் உள்ள பானங்களுக்கு தற்காலிக விடை கொடுப்பது, குடல் புண் குணமடைய வழிவகுக்கும் என்கிறார்.

மேலும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, குடலை சுத்தமாக வைத்திருக்கவும், குணமாக்கவும் உதவும் என்றும், சிறுநீரகங்களுக்கும், ஜீரணத்துக்கும், தோலுக்கும், சோர்வு ஏற்படுவதிலிருந்து தடுக்கவும் உதவும் என்கிறார் அவர்.

மேலும், ஜீரணிக்க எளிதான புரத உணவு, ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவு வகைகள், வதக்கிய காய்கறிகள், எலும்பு சூப், பைபர் நிறைந்த உணவு வகைகள் மற்றும் குளூட்டன் இல்லாத தானியங்கள் ஆகியவை சிறந்தவை என்கிறார் அவர்.

பொதுவாகக் கூறினால், உங்கள் உணவில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பழங்கள், சூப்கள் மற்றும் smoothies வகை உணவுகளை சேர்த்துக்கொள்வது அவசியம் என்கிறார் Ms Holmes.

Previous Story

'மொசாத்' 

Next Story

லதா மங்கேஷ்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?