கொரோனா சுனாமி: WHO எச்சரிக்கை

டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகளின் பரவல் உலக அளவில் இரட்டை அச்சுறுத்தல்கள் ஆகும், இந்த கொரோனா சுனாமியால் உலக சுகாதார கட்டமைப்பை உலுக்குகிறது என உலக சுகாதார அமைப்பு  எச்சரித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில்அறிவிக்கப்பட்டஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. உலக அளவில் டிசம்பர் 20 முதல் 26-ம் தேதிவரை 49.90 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதாவது 28.40 லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்டனர். இது கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தைவிட 3% அதிகமாகும். ஒரு லட்சம் பேருககு 304 பேர் பாதிக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளத. பெரும்பாலான நாடுகளில் டெல்டா வகை வைரஸ்தான் அதிகமாகப் பரவி இருந்தாலும், ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் மாறுபாட்டால் ஏற்பட்ட புதிய பாதிப்பால் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களை குறைத்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் டென்மார்க்கில் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு பரவக்கூடிய மாறுபாடு கொண்ட வைரஸ் எண்ணிக்கையை இட்டுச் சென்றுள்ளது.

டெட்ரோஸ் அதானோம்

இந்தநிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகளின் பரவல் உலக அளவில் இரட்டை அச்சுறுத்தல்கள் ஆகும். இது கொரோனா தொற்று எண்ணிக்கையை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. இது மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகளில் எண்ணிக்கை உயர காரணமாக அமைகிறது.

கடந்த வாரம் உலகளாவிய அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 11 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒமைக்ரான் அதிகமாக பரவக்கூடியது. அதே நேரத்தில் டெல்டாவைப் போலவே புழக்கத்தில் உள்ளது. இது  கொரோனா தொற்று சுனாமிக்கு வழிவகுக்கிறது. இது சோர்வுற்ற சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சரிவின் விளிம்பில் உள்ள சுகாதார அமைப்புகள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.

அதிக எண்ணிக்கையிலான சுகாதார ஊழியர்களும் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்இவ்வாறு அவர் கூறினார்.ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கண்காணிப்பாளரின் கருத்துப்படி ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன.ஹார்வர்ட் தொற்றுநோயியல் நிபுணரும் நோய் எதிர்ப்பு நிபுணருமான மைக்கேல் மினா நா்ம பனிப்பாறையின் நுனியில் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

Previous Story

உலகின் முதல் ரோபோ நீதிபதி -  சீனா !

Next Story

தங்கம்: புத்தாண்டில் விலை அதிகரிக்கும்