கொரோனாவுக்கு முடிவு : போப்  பிரார்த்தனை

ரோம் : கிறிஸ்துமசை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில், ”கொரோனா தொற்றுக்கு முடிவு ஏற்பட வேணடும்,” என, ரோமன் கத்தோலிக்க சபை தலைவர் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்தார்.

உலகம் முழுதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ரோமன் கத்தோலிக்க தலைநகரமான வாடிகன் நகரில் வழக்கமாக கிறித்துமஸ் தினம் களைகட்டும். நள்ளிரவில் அங்கு கூடும் பல ஆயிரம் பேருக்கு ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் ஆசி வழங்குவார்.

ஆனால் கொரோனா அச்சறுத்தல் காரணமாக கடந்தாண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் தனி அறையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை செய்த போப் பிரான்சிஸ், ‘டிவி’ சேனல்கள் வழியாக மக்களிடம் உரையாற்றினார்.

இத்தாலியில் இப்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமசை முன்னிட்டு நேற்று வாடிகன் சதுக்கத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்க, 10௦௦ பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அருளாசி வழங்கி போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை செய்தார். கிறிஸ்துமசை முன்னிட்டு அவர் வெளியிட்ட செய்தியில் கூறியிருந்ததாவது:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு முடிவு ஏற்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

கொரோனா தொற்றால் கடுமையான வலிகளையும், வேதனைகளையும் நாம் சந்தித்து வருகிறோம். உலகில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சு வாயிலாக அமைதி தீர்வு காண வேணடும்.

ஏழை, எளிய மக்களிடம் கனிவாக நடந்து கொள்வோம். கொரோனா தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசியே சிறந்தது. பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous Story

ஆப்கான் மற்றொரு ஷாக் உத்தரவு!

Next Story

அரபாத் 50 வருட நிகழ்வுகள் முன்கூட்டியே ஆரம்பம்!