-நஜீப் பின் கபூர்-
சிங்கள ஊடகங்களை கடுமையாக சாடுகின்றர் ரத்னஜீவன்!
கட்சிகள் பொதுத் தேர்தல் பரப்புரைக்குத் தயாராகின்றன!
ஜனாதிபதி தெரிவு தொடர்பில் எதிரணி சட்ட நடவடிக்கை!
அரச தரப்பு செல்வாக்கில் வீழ்ச்சியா! பலமான சந்தேகம்!
ஐ.தே.க.உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை!
தேர்தலைத் தள்ளிப்போட எதிர்தரப்பினரும் சில சிவில் சமூகத்தினரும் எடுத்த எல்லா முயற்ச்சிகளும் தோற்றுப் போய் இருக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்புக்களும் தேர்தலுக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கின்றது. நிச்சயமாக ஆகஸ்ட் 21 அல்லது 28ல் பொதுத் தேர்தல் என்ற நிலை இருக்கின்றது. தேர்தல் திணைக்களம் ஏற்கெனவே தேர்தலை நடத்துவதற்கான வேலைகளைத் துவங்கிவிட்டது. வாக்குச்சீட்டுக்கள் அச்சாகிக் கொண்டிருக்கின்றன. எனவே எதிரணியினர் முன்னெடுத்துச் சென்ற புதிய வேட்பு கோருகின்ற விவகாரமும் சஜித்-ரணில் இணைவு பற்றிய கதைகளும் இளவு காத்த கிளியின் கதையாக முடிந்திருக்கின்றது.
ஞானசார பிரதமர்!
நடந்து முடிந்துள்ள வேட்பு மனுப்படி 2020ல் பொதுத் தேர்தல். இதற்கிடையில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட ஞானசார அணி தமக்கு நீதிமன்றம் அங்கிகாரம் தரும் நாமே வருகின்ற தேர்தலில் பிரதமர் பதவியை கைப்பற்றுவோம் அல்லது தீர்மானிப்போம் என்று சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு செய்தி சொல்லி இருந்தார்கள். நம்பிக்கை தானே வாழ்க்கை கனவுகளைப் பெரிதாக காண்பதில் எந்தத் தவறும் கிடையாது. எனவே பாராளுமன்ற உறுப்பினராவதை விட அதிலுள்ள பெரிய ஆசனத்தில் அதாவது பிரதமர் பதவிக்குக் காண் வைப்பத்தில் தப்பே கிடையாது. கடந்த பொதுத் தேர்தலில் நாடு பூராவிலும் போட்டியிட்ட இவர்கள் ஒட்டுமொத்தமாக 20ஆயிரம்வரை வாக்கு வாக்குகளைத்தான் பெறமுடிந்தது.
நாளை தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு பகிரங்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து வார இறுதியில் அல்லது அடுத்தவராம் முதல் நாட்களில் வேட்பாளர்களின் இலக்கங்களும் வழங்கப்பட இருக்கின்றன என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே வருகின்ற நாட்களில் கொரோனாவுக்குள் தேர்தல் ஜூரமும் மக்களிடத்தில் தாண்டவமாட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கின்றது, கடற்படையினருக்ககும் வெளிநாட்டில் இருந்த இங்கு வருகின்றவர்களுக்கும் தான் கொரோனா தொற்று என்று சொல்லப்படுகின்றது. அவர்களும் நமது நாட்டுக் குடி மக்களே! உள் நாட்டில் கொரோனா தொலைந்து விட்டது என்றுதான் கதை இருக்கின்றது.
சீறும் பேராசிரியர்!
2020 பொதுத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய சால்களைக் கொடுக்கக் கூடும். அதே நேரம் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்தினஜீவனை பேரின ஊடகங்களும் சில அரசியல் குழுக்களும் மந்தையிலுள்ள ஒரு கறுப்பாடாகவே கருதுகின்றார்கள். ஆனால் அவரும் துணிவுடன் தனது கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகின்றது. எனவே கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்று கேட்பாட்டின்படி இதன் பின்னர் உலகம் தனது இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டி இருக்கின்றது. இது நமது நாட்டுக்கும் பொருந்தும். எனவே எப்படியோ தேர்தல் நடந்தே தீரும் என்ற நிலை இப்போது பிரகாசமாக இருந்தாலும் தேர்தலுக்கு பின்னர் நாட்டு நடப்புக்கள் மக்களின் வாழ்கை பற்றி யோசிக்கின்ற போது நமக்கு அச்சமும் பயமுமாக இருக்கின்றது.
தேர்தலுக்கு புதுவிதி!
பொதுத் தேர்தல் நடக்கின்ற காலப் பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்கு விதிகள் பற்றியும் வைத்தியத் துறையினரின் ஒத்துழைப்புடன் ஒரு வழிகாட்டியை தேர்தல் திணைக்களம் வேட்பாளர்களுக்கு வழங்க இருக்கின்றது ஒரு மீற்றர் தள்ளி இருத்தல் கைகழுவுதல் என்ற விவகாரங்களுடன் தேர்தல் பிரசாரங்கள் நடக்கின்ற காலப் பகுதியில் பொதுக் கூட்டங்களைத் தவிர்த்து சிறு குழுக் கூட்டங்களை நடாத்துவதற்கு சிபார்சுகள் செய்யப்பட்டிருக்கின்றது. எனவே இந்த முறை பேரணிகளுக்கு இடமிருக்காது. எனவே அரசியல் கட்சியில் கொழும்பில் நடக்கின்ற கூட்டங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து பேரூந்துகளையும் ஆட்களை அழைத்து வரும் சிரம் இந்தமுறை பெரிய கட்சிகளுக்கு இருக்காது.
இந்த விதிகளின் படி ஒரு வேட்பாளர் தனது மாவட்டத்தில் எத்தனை கூட்டங்களை நடாத்த முடியும் மக்களை எப்படிச் சந்திக்க முடியும் என்பதெல்லாம் திட்டமிட வேண்டி இருக்கின்றது. கொழும்பு, காம்பஹ, குருனாகல, கண்டி போன்ற வக்காளர் செரிந்து வாழ்கின்ற ஒரு மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்குவார்கள். எனவே அவர்கள் தமது தேர்தல் பரப்புரைகளில் புதிய பல உத்திகளைக் கையாள வேண்டி இருக்கின்றது. வழக்கமான போஸ்டர்கள் துண்டுப் பிரசுரங்களைக் கூட மக்களுக்கு கையளிப்பதில் காட்சிப்படுத்துவதில் பெரும் நெருக்கடிகளுக்கு இடமிருக்கின்றது. துண்டுப் பிரசுரங்களை வழங்குபவரும் அதனைப் பெருபவரும் கூட மீற்றர் விதியையும் கைகழுவும் நியதியையும் கடைப்பிடிக்க வேண்டி இருக்கின்றது.
ஆளும் தரப்பு சந்தேகம்!
தேர்தலை தள்ளிப்போடுவதற்கு எதிரணியும் தேர்தல் ஆணையாளரும் எடுத்த முயற்ச்சிகளைத் நீதி மன்றம் நிராகரித்து நல்லதொரு தீர்ப்பைக் கொடுத்திருக்கின்றது. இப்படிக் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்லி இருக்கின்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ. ஆளும் தரப்பிலுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிரணியில் உள்ள அரசியல்வாதிகள் சிலரும் தேர்தல் ஆணைக்குழு பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றது என்று பரஸ்பரம் குற்றம் சாட்டுவதிலிருந்து ஆணைக்குழு தனது பணியை சரியாகவே செய்து கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. எனவே அரசியல்வாதிகளின் ஆணைக்குழுமீதானா விமர்சனங்கள் கருத்தில் எடுத்தக் கொள்ளத்தேவையில்ல என்ற முடிவுக்கு நாம் வராம்.
தேர்தல் அறிவிப்பு வந்த துவக்க நாட்களில் ஆளும் தரப்பு தெளிவான ஒரு வெற்றி பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் இடையில் வந்த கொரோனா எல்லாவற்றையும் சிதறடித்து விட்டது. எனவே ராஜபக்ஸாக்கள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை இன்னும் எந்தளவுக்கு அதே நிலையில் இருக்கின்றது என்ற விவகாரத்தில் அரச தரப்பினரும் மிகுந்த சந்தேகத்தில் இருக்கின்றார்கள். ஆனால் அரச தரப்பு செல்வாக்கில் சரிவும் விமர்சனங்களும் ஏற்பட்டிருப்பதும் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் உண்மையானதுதான் என்றாலும் இந்த வீழ்ச்சி நிலை வாக்களிப்பு வீதத்தை பாதிப்பை உண்டு பண்ணுமா அல்லது அந்த வாக்குகள் வேறும் எங்காவது பதிவாகும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா என்பதில் ஒரு தெளிவில்லாத நிலை தென்படுகின்றது.
அலி சப்ரியும் அல்ஜெசீராவும்
இதற்கிடையில் ஆளும் தரப்பில் தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கின்ற ஜனாதிபதி சட்டதரணி அலி சப்ரி அல் ஜெசீரா தொலைக் காட்சி சேவைக்குக் கொடுத்த ஒரு பேட்டி நிகழ்ச்சி இனவாதிகள் மத்தியில் பெரும் அதிர்ப்தி நிலையைத் தோற்று வித்திருக்கின்றது. அவர் நாட்டையும் சமூகத்தையும் காட்டிக் கொடுத்து விடட்hர் என்று சில பௌத்த குருமார் கொதித்துப் போயிருக்கின்றார்கள். இதற்கிடையில் அலி சப்ரி மடிலே பஞ்ஞாலோக்க தேருக்கு எதிரான 150 கோடி ந~;ட ஈடுகோரி வழக்கொன்றை முன்னெடுப்பதற்கு செய்திருகின்ற ஏற்பாடும் கடும் விமர்சனத்தக்கு இலக்காகி இருக்கின்றது. இது ராஜபக்ஸாக்களுக்கும் அலி சப்ரிக்கும் உள்ள உறவில் நிச்சயம் விரிசலை ஏற்படுத்தும் என நாம் நம்புகின்றோம்.
அத்துடன் அவரது பாரளுமன்ற உறுப்புரிமைக்கும் புதிய அரசியல் எதிர்பார்க்கின்ற பதவிகளுக்கும் சேதங்களை உண்டு பண்ண நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஜனாதிபதி ஜீ.ஆரை. அதிகாரத்துக்குக் கொண்டு வர பங்காற்றியவர்களுடனே இப்போது அலி சப்ரிக்கு மோதல். இது கூட தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்ற ஆட்டமோ என்ற சந்தேகமும் நமக்கு ஏற்படுகின்றது. கடும் போக்கு இனவாதிகளுக்கு ஜனாதிபதி ஜீ.ஆருடன் சப்ரி உறவு ஒரு பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்றுதான் தெரிகின்றது. தேர்தல் நெருக்கமடையும் இந்த நேரத்தில் சிறுபான்மைக்கு எதிரான கடுமையான வார்த்தைகளை பாவித்தால்தான் நமக்கு வாக்குகள் கிடைக்கும் என சில இனவாதிகள் நம்புகின்றார்கள்.
கட்சிகள் தயாராகின்றன!
இதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை எதிர்பார்க்கின்ற ரவி கருனாநாயக்க தமது கட்சியில் இருந்த அடிப்படைவாதிகளும் பிரிவினைவாதிகளும் இப்போது வெளியேறி விட்;டார்கள் இப்போது கட்சி சுத்தமடைந்திருக்கின்றது என்று சில தினங்களுக்கு முன்னர் பேசி இருந்தார். அவரது இந்தப் பேச்சு ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது பெரும்பான்மை மக்களின் கட்சியாக புனிதமடைந்து விட்டது என்றுதான் அதன் பொருள். அந்தக் கட்சியில் போட்டியிடுகின்ற சிறுபான்மை வேட்பாளர்கள் அதற்குத் தலைவர் ரணிலிடம் முறைப்பாடொன்றை வாய்மூலம் சொல்லி இருக்கின்றார்கள். அப்போது சரி நான் ரவி அப்படி ஏதும் சொன்னாரா எனக்கேட்டுப்பார்க்கின்றேன் என்று நைசாக வழக்கம் போல் நழுவி இருக்கின்றார்.
வடக்கு கிழக்கு அரசியலிலும் ஒருமாற்றத்திற்கு வாய்ப்பிருக்கின்றது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் சமூக ஊடகங்களுடாக இப்போது அங்கு கடுமையான தேர்தல் பரப்புரைகள் துவங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதில் ஆரோக்கியமான விவகாரங்களும் ஆயோக்கியத் தனமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கிழக்கில் பிள்ளையான் தரப்பும் வியலேந்திரன் தரப்பும் கத்தி பொல்களுடன் மோதல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதனால் வாக்காளர்களுக்கு அங்கு பெரும் பீதி ஏற்பட்டு இருக்கின்றது.
சஜித் அணியினர் இதுவரை தேர்தலைத் தள்ளிப்போடுவதில்தான் ஆர்வமாக இருந்து வந்தார்கள் இப்போது தேர்தல் என்று முடிவாகி விட்டது. எனவே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ களத்துக்கு வர வேண்டி இருக்கின்றது. எனவே நாளை தனது 291 வேட்பாளர்களை சஜித் கொழும்புக்கு அழைத்து அறிவுரைகளை வழங்க இருக்கின்றார்.15000 குழுக்களை அமைத்து அவர்கள் தமது பரப்புரைக்குத் தயாராக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐவர் கொண்ட குழுவொன்றை அமைத்து தனது பரப்புரைகளை முன்னெடுக்க இருக்கின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரவி கருனாநாயக்க தலைமையிலான அந்தக் குழுவில் கருனாசேன கொடித்துவக்கு, ருவன் விஜேவர்தன, ஆசு மாரசிங்ஹ, சுதத் சந்திரசேக்கர ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றார்கள்.
இதற்கிடையில் உள்ளாட்சி சபையில் உறுப்பினருகளாக இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கு ரணில் தரப்பினர் கடுமையான அழுத்தங்களைத் தற்போது கொடுத்து வருகின்றார்கள். அமைச்சர்களாகவும் கட்சியில் உயர் பதவிகளில் இருந்த 99 பேரை நாம் தூக்கி எறிந்திருக்கின்றோம் எனவே நீங்கள் வருகின்ற தேர்தலில் எமது ஐக்கிய தேசியக் கட்சிக்காகவே உழைகை;க வேண்டும் என்ற எச்சரிக்கை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பலர் அச்சமடைந்திருக்கின்றார்கள் இன்னும் பலர் துணிச்சலுடன் ரணிலுக்கு எதிராக சஜித் தரப்பில் களமிறங்க உறுதி பூண்டிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
ஜனாதிபதி தெரிவு செல்லாது!
இதற்கிடையில் ஜனாதிபதி ஜீ.ஆர். தெரிவு தொடர்பில் புதிய சர்ச்சை தோன்றி இருக்கின்றது. இது பற்றி கருத்துத் தெரிவிக்கின்ற எதிரணி அரசியல்வாதி பாட்டலி சம்பிக்க ரணவக்க அமெரிக்கா குடியுரிமையை நீக்கிக் கொள்ளாமலே தற்போது ஜனாதிபதி சட்ட விரோதமான முறையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றார். அவர் தேர்தலில் போட்டியிடுகின்ற போதும் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற போதும் ஒரு அமெரிக்க பிரசையே. இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தே கீதா குமாரசிங்ஹவின் என்பவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதும் மக்களுக்கு நினைவிருக்கும் என்று கூறுகின்ற சம்பிக்க இது பற்றி சட்டத்தரணிகளைச் சந்தித்துப்பேசி வருவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
மக்கள் விருப்பப்படி தெரிவு செய்யப்பட்ட நமது ஜனாதிபதிக்கு அப்படி ஒரு நிலை வந்தால் நாம் வீதியில் இறங்கிப் போராடுவோம் என்று கோதா ஆதரவு கடும்போக்கு பௌத்த குருமார் சூளுரைத்து வருகின்றார்கள். தற்போது தேர்தல் காலத்தில் இந்த விவகாரத்தை பேசு பொருளாக எடுத்ததால் தமக்கு பாதிப்பு என்று நினைக்கின்ற சஜித் இந்த விவகாரம் தொடர்பில் நாம் அறிந்த வரை இதுவரை வாய்திறக்காமல் இருந்து வருகின்றார். உண்மையிலேயே தற்போதய ஜனாதிபதி ஜீ.ஆர். சட்ட விரோதமாகத்தான் இந்த அதிகாரமிக்க பதவியைக் கைப்பற்றினாலும் அவரை பதவியிலிருந்து வெளியேற்றுவது என்பது ஒரு இலகுவானா காரியமாக நாம் கருதவில்லை. இதற்கும் எதிரணி சர்வதேசத்தின் உதவியை நாடவேண்டி வரும். இது கூட சாத்தியமாகும் என நாம் நம்பவில்லை.