இப்போது உலகில் கேன்சர் நோய்க்கு தான் உரிய மருத்துவச் சிகிச்சை இல்லாமல் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழக்க நேரிடுகிறோம்.
இதற்கிடையே என்டெரோமிக்ஸ் என்ற புதிய வேக்சினை ரஷ்யா இப்போது அறிமுகப்படுத்தவுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது உலகில் உள்ள மிக மோசமான நோய்ப் பாதிப்பு என்றால் கேன்சர் தான். புற்றுநோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நாம் பலரையும் இழக்கிறோம். இதுவரை புற்றுநோயைத் தடுக்க எந்தவொரு வேக்சின் இல்லை.
இதுவே அதை மிக மோசமானதாக மாற்றுகிறது. அதேநேரம் புற்றுநோய் தடுப்பூசி குறித்த ஆய்வுகளும் உலகெங்கும் நடந்து வருகிறது. கேன்சர் வேக்சின் இதற்கிடையே புற்றுநோய் சிகிச்சையில் மிகப் பெரிய புரட்சியாக என்டெரோமிக்ஸ் அடிப்படையிலான தடுப்பூசியை ரஷ்யா அறிமுகப்படுத்துகிறது.
இந்த என்டெரோமிக்ஸ் வேக்சின் மருத்துவச் சோதனைகளில் 100% செயல்திறனையும் பாதுகாப்பையும் காட்டியிருக்கிறது. இந்த வேக்சின், புற்றுநோய் செல்களை அழிப்பதோடு, பெரிய கட்டிகளைக் கணிசமாகக் குறைக்கிறது.
அதேநேரம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, இது அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் இறுதியான ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கொரோனா பார்முலா mRNA வேக்சின் என்பது ஒப்பீட்டளவில் ஒரு புதிய தொழில்நுட்பம். குறிப்பாகக் கொரோனா காலக்கட்டத்தின் தான் இந்த தொழில்நுட்பத்தில் வேக்சின்கள் தயார் செய்யப்பட்டன.
அவை நல்ல பலனையும் கூட கொடுத்தது. இதன் காரணமாகவே அதே அதிநவீன mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்டெரோமிக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவித்து, புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அகற்றும் வகையில் செயல்படும்.
கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு போன்ற வழக்கமான சிகிச்சைகளைப் போல இது இருக்காது. இந்தத் தடுப்பூசி ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ப வேலை செய்யும். அதாவது அந்த நோயாளிக்கு எந்த கேன்சர் பாதிப்பு இருக்கிறதோ அதைப் பொறுத்து அவரின் செல்களை பயிற்றுவிக்கும்.
அதன் மூலம் வைரஸ் பாதிப்பு அழிக்கப்படும். இதன் மூலம் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். அதையே தான் இந்த கேன்சர் சிகிச்சையிலும் யூஸ் செய்துள்ளனர்.
சிக்கல் இல்லை மருத்துவப் பரிசோதனையில் இந்தச் சிகிச்சையில் எந்தவொரு பெரிய சிக்கலும் கண்டறியப்படவில்லை.
அனைவரது உடலும் இந்த வேக்சினை ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், யாருக்கும் எந்தவொரு கடுமையான பக்கவிளைவுகளும் பதிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது..முன்னதாக, 48 தன்னார்வலர்களுடன் என்டெரோமிக்ஸ் ஓன்கோலிட்டிக் தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகளை ரஷ்யா நடத்தியுள்ளது.