கேன்சருக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு: ‘இலவசம்’

உலகையே திரும்பி பார்க்க வைத்த ரஷ்யா.!   

russia putin cancer

ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த  தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார். ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வு உள்ளதாகவும், கடைசி டெஸ்ட் நடந்து வருவதாகவும் விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே புடின் இது தொடர்பாக ஊடகங்களில் பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது என்ன மாதிரியான வேக்சின்.,. ஊசியா.. வேறு எதுவுமே? எப்படி செயல்படும்? என்ன தொழில்நுட்பம்? என்றெல்லாம் புடின் விளக்கம் அளிக்கவில்லை.

கேன்சர் பாதிப்பு: வருடங்கள் ஓடினாலும்.. பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத.. குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது கேன்சர்தான்! பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது.

கேன்சர் மருந்து: கடந்த வருடம் கூட அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது. சோதனையில் கலந்து கொண்ட எல்லா கேன்சர் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த மருந்து வைத்து சோதனை செய்யப்பட்ட எல்லோரும் 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர். மிக சிறிய அளவில்தான் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், எளிதாக dostarlimab என்ற மருந்து கொடுத்தே நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர்.

மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் positron emission tomography என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு ஆராய்ச்சி ; இந்த நிலையில்தான் இன்னொரு ஆராய்ச்சியில் இதேபோல் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட கூட்டு ஆராய்ச்சிக் குழு ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை கேன்சருக்கு எதிராக செய்துள்ளது.

புற்றுநோய் செல்களை அகற்றுவதற்கான ஒரு முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஒளியை வைத்து தூண்டுவதன் மூலம் சில மூலக்கூறுகளை அதிர வைத்து.. அந்த அதிர்வை வைத்து கேன்சர் செல்களை கொல்லும் மருத்துவத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவ இமேஜிங்கிற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய சாய மூலக்கூறை வைத்துதான் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மூலக்கூறில் இருக்கும் அணுக்கள் ஒரே மாதிரியாக அதிர்வுறும் குணம் கொண்டவை. சில ஒளி தூண்டுதலுக்கு இவை ஒரே மாதிரியாக ஒத்திசைவோடு அதிரும். இப்படி ஒரே மாதிரியாக அதிர்வுறும் மூலக்கூறுகள் பிளாஸ்மோன் என அழைக்கப்படும், இந்த பிளாஸ்மோன் கேன்சர் செல்கள் மீது வைக்கப்படும் போது .. அது அகச்சிவப்பு ஒளியால் தூண்டப்படும்போது, ​​​​புற்றுநோய் செல்களின் செல் சவ்வு சிதைந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது இந்த மூலக்கூறுகள் போடும் நடனம் காரணமாக புற்றுநோய் பலியாகிவிடும் என்கிறார்கள். நேச்சர் கெமிஸ்ட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்த முறை 99 சதவீத செயல்திறனைக் கொண்டு இருந்தது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த முறையில் 99 சதவிகித புற்றுநோய் செல்கள் மாறுகின்றன.

The Statesman on X: "Russia has developed an #mRNA vaccine for cancer, which is set to be available from early 2025. It will be distributed for free to Russians. The vaccine aims

மேலும் மெலனோமா கட்டிகளைக் கொண்ட எலிகள் பாதி சிகிச்சைக்குப் பிறகு முற்றிலுமாக குணமடைகின்றன. முற்றிலுமாக இவை புற்றுநோயற்றதாக மாறி உள்ளது. கிட்டத்தட்ட இந்த செல்கள் ட்ரில்லிங் மிஷின் போல செயல்பட்டு கேன்சர் செல்களை 99 சதவிகிதம் வரை கொண்டு கேன்சரை குணப்படுகிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Previous Story

"13 குறித்து இந்தியாவுடன் பேசும் தேவை வரவில்லை" 

Next Story

முன்னுதாரணம் காட்டிய-திருமலைYMMA