கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் படுகொலை

இந்தச் சம்பவம் நேற்று (28.10.2024) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் கேகாலை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடையவர் ஆவார்.இது தொடர்பில் தெரியவருவதாவது,

இனங்காணாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரது கை, கால்களைக் கட்டி வைத்து விட்டு அவரைத் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

மேலதிக விசாரணைகள்

பின்னர், அந்த நபர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியையும் தாக்கி காயப்படுத்தியுள்ள நிலையில், வீட்டின் அலுமாரியில் இருந்த அனைத்து பொருட்களையும் கலைத்து விட்டு கார் ஒன்றையும் திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் மனைவி சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருடப்பட்டதாகக் கூறப்படும் கார் பின்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் படுகொலை | Ex Member Of Kegala Province Murdered

சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Story

இலவச பஸ்சில் டிக்கெட் வாங்காத பெண்ணுக்கு ரூ.200 அபராதம்

Next Story

இஸ்ரேலின் நடவடிக்கையால்  ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் கோபத்தில்