கூட்டரசாங்கத்துக்கு வேலை கிடையாது!

ஜனாதிபதித் தேர்தலின் போது மிகவும் கேவலமாக அனுர குமாரவையும் அவரது ஜேவிபி. கட்சியையும் விமர்சனம் செய்தவர்கள் தேர்தல் முடிந்து அவர் வெற்றி பெற்றதும் அவருடன் கூட்டணிக்குத் தயாராக கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தனர்.

இதில் குறிப்பாக சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள்தான் முன்னணியில் இருந்தனர். சிலர் சமூக ஊடகங்களை வைத்து தனக்கு நீதி அமைச்சு வெளிவிவகார அமைச்சு என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் மக்களை அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்தே தூக்கி எறிந்து விட்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் அனுர நண்பர் தனக்கும் அமைச்சுக் கிடைக்கும் என்று சொல்லி இருந்தனர்.

சிலர் நாம் எப்போதும் ஜனாதிபதியின் கட்சிதான் ஒரு போதும் எதிரணியில் அமர மாட்டோம் என்றார்கள். ஹக்கீம் போன்றவர்கள்   தேசிய அரசுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அரசுக்குக் கிடைத்திருக்கின்ற இந்த அசுர பலத்தால் அவர்கள் கனவுகள் எல்லாம் அடிபட்டுப் போய் விட்டது.

 

Previous Story

அணுர தொழில் பார்ப்பது யார்!

Next Story

பெண்களினால் வலுப்பெறும் நாடாளுமன்றம் !