நஜீப்
நன்றி 16.11.2025 ஞாயிறு தினக்குரல்
அனுர அதிகாரத்துக்கு வந்த பின்னர் பொது எதிரணி வரும் 21ம் திகதி நடத்த இருக்கின்ற ஹிட்லருக்கு எதிரான பேரணி ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு பல காரணங்கள். ஆளும் தரப்பு செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளதா?
அடுத்து பிரதான எதிரணித் தலைவர் சஜித்துக்கு எதிராக நாமல் இமேஜ் எந்தளவுக்கு நாட்டில் அதிகரித்திருக்கின்றது. மேலும் ராஜபக்ஸாக்கள் பற்றி சிங்கள மக்கள் என்ன மனநிலையில் இருக்கின்றார்கள் என்பதும் இந்தப் பேரணியில் தெரியவரும்.
அவை அப்படி இருக்க மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கின்ற மொட்டு வேட்பாளர்கள் அவர்கள் பேரணிக்குக்கூட்டி வரும் தலைகளின் கணக்குப்படிதான் தீர்மானிக்கப்பட இருப்பதாகவும் ஒரு இலக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றதாம்.
இப்படி 500 பேர் தலா 25 பேரைக் கூட்டி வந்தாலும் பண்ணிரெண்டாயிரத்து ஐநூறு (12500) என வரும். ஐதேக. மற்றும் சில்லறைகள் ஒரு 5000 பேரை கூட்டி வந்தாலும் தொகை (17500) இதுதான்.!





