கூகுள், மைக்ரோசாப்ட் மீது தாக்குதல்…!

ஈரான் மீது அமெரிக்கா தரை வழி தாக்குதலுக்கு ரெடியாகியிருக்கிறது. அப்படி ஒன்னு நடந்ததல், துபாய் உள்ளிட்ட வளைகுடா நகரங்களில் உள்ள அமெரிக்க ஐடி நிறுவனஙகளான கூகுள், மைக்ரோசாப்ட் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

வேலியில் போன ஓணானை பிடித்து மடியில் கட்டிக்கொண்ட கதையாக அமெரிக்கா தற்போது முழித்து வருகிறது.

ஈரான் போரை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ள டிரம்ப், தரைவழி தாக்குதலுக்கு ரெடியாக தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்.

ஐடி நிறுவனங்கள் மீது தாக்குதல்: இந்நிலையில், ஈரான் தலைமைக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதை தொடர்ந்தால், மத்திய கிழக்கில் செயல்படும் அமெரிக்க தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களை இலக்கு வைப்போம் என இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) அச்சுறுத்தியுள்ளது.

இந்த பதிலடித் தாக்குதல்கள் இன்று மாலை முதலே தொடங்கலாம் என ஐஆர்ஜிசி தெரிவித்துள்ளதாக ஈரான் அரசு ஊடகமான தஸ்னிம் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

கூகுள், மைக்ரோசாப்ட் தாக்குதல் காரணமாக, அமெரிக்காவிற்குச் சொந்தமான நிறுவனங்களை விட்டு, 1 கிலோமீட்டர் தூரம் தள்ளியிருக்குமாறு அதன் ஊழியர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் ஈரான் எச்சரிக்கை கொடுத்திருக்கிறது.

தாக்குதல் நடத்துவதாக 18 நிறுவனங்களை ஐஆர்ஜிசி லிஸ்ட் போட்டியிருக்கிறது. அதில்,

சிஸ்கோ,

ஹெச்பி,

இன்டெல்,

ஆரக்கிள்,

மைக்ரோசாப்ட்,

ஆப்பிள்,

கூகிள்,

மெட்டா,

ஐபிஎம்,

டெல்,

பலன்டிர்,

என்விடியா,

டெஸ்லா,

போயிங்

உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். அமெரிக்கா சொன்னது என்ன? இந்த அச்சுறுத்தல்கள் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

பிற நிறுவனங்கள் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. ஐஆர்ஜிசி-யின் புதிய அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்த வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், “பயங்கரவாத ஆட்சியின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் 90% சரிவு ஏற்பட்டிருப்பது போல, ஈரான் நடத்தும் தாக்குதலை முறியடிக்க அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளது” என தெரிவித்தார்.

ஏற்கெனவே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது இந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்கட்டமைப்பு கொண்ட சில நிறுவனங்களையும் ஐஆர்ஜிசி இதேபோல் அச்சுறுத்தியது.

அவற்றின் தொழில்நுட்பம் இராணுவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதால், கூகிள், மைக்ரோசாப்ட், பலன்டிர், ஐபிஎம், என்விடியா மற்றும் ஆரக்கிள் ஆகியவை புதிய இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டன.

ஈரானின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதுடன், தாக்குதல் ஏற்பட்டால் ஐடி அலுவலகங்களை எவ்வாறு பாதுகாப்பது என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன.

Previous Story

ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.!