-நஜீப்-
(நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல்)
இலங்கை வரலாற்றில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பாராளுமன்றத்தின் மூலம் முதன் முறையாக வெளியேற்றப்பட்டிருக்கின்றார். பிரேரணை 177க்கு சீரோ என்று நிறைவேறி இருக்கின்றது.
கலந்து கொள்ளாதவர்கள் 46 பேர். விவாதத்தில் நாமல் தேசபந்துவைப் பாதுகாக்க ஆஜரானாலும் வாக்கெடுப்பை தவிர்த்திருந்தார். தமிழரசு ஆதரவாளித்தது. சஜித் தரப்பில் 40 உறுப்பினர்களில் 10 பேர் பேர் மட்டுமே பிரேரனைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
விவாதம் நடைபெற்ற போது சபையில் இருந்தும் வாக்களிக்கும் நேரம் பார்த்து ஸ்கொப்பாகியவர்களை மறைமுகமாக தேசபந்துவுக்கு ஆதரவானவர்கள் என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க ராஜபக்ஸாக்களின் குற்றச்செயல்களின் கோட்பாதராக தேசபந்து தொழில் பார்த்து வந்திருக்கின்றார் என்றார். முஜீபுர் ரஹ்மான் இது பக்கச்சார்பான அதிகாரிகளுக்கு நல்லதொரு படிப்பினை என்றார்.





