-யூசுப் என் யூனுஸ்-
உக்ரைன் போரில் தமக்குச் சாதகமான வாய்பை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதற்கு ஈரான் ரஸ்யாவுக்குக் கொடுக்கின்ற ஆயுத உதவிதான் காரணம் என்று தற்போது மேற்கு நாடுகள் குற்றம்சாட்டி ஈரானை அச்சுறுத்தி மேலும் பொருளாதாரத் தடைகள் பற்றியும் பேசி வருகின்றன.
இதற்குப் பதில் கொடுத்திருக்கின்ற ஈரான் இது அமெரிக்காவின் இயலாமையைத்தான் காட்சிப் படுத்துகின்றது. போரில் ஏற்படுகின்ற தோல்விகளுக்குத் தம்மைக் காரணம் காட்டுவது அவர்களுடைய இயலமையின் வெளிப்பாடு என்றும் சொல்லி ஈரான் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு சூடாகப் பதிலையும் கொடுத்திருக்கின்றது.
இது வரைகாலமும் அடக்கி வாசித்த ஈரான் இப்போது ஏட்டிக்குப் போட்டியாகப் பேசி அமெரிக்காவை சீண்டி வருகின்றது. அதே போன்று சொல்லிச் சொல்லி இருக்காமல் ஈரான் மீது தாக்குதல்களை நடாத்திப் பார். அப்போது நிழ்வதை உலகம் பார்க்கும் என்று ஈரான் சொல்லி இருக்கின்றது.
இஸ்ரேலைப் பார்க்கும்படி சொல்லாமல் உலகம் பார்க்கும் என்ற வாhத்தையின் அர்த்தம் என்ன என்பது புரியவில்லை. அவர்கள் வழக்கமாகச் சொல்வது போல இஸ்ரேலை சாம்பலாக்கி விடுவார்களோ என்னவோ தெரியாது?
நன்றி: 16.07.2023 ஞாயிறு தினக்குரல்