மின் கட்டண திருத்தத்திற்கமைய, மீண்டும் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்குட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டணக் குறைப்பிற்கமைய,
0 முதல் 30 மின் அலகுகளுக்கான கட்டணம் 26.9 சதவீதம் .
31 முதல் 60 மின் அலகுகளுக்கான மின் கட்டணம் 10.8 சதவீதம்,
61 முதல் 90 மின் அலகுகளுக்கான மின் கட்டணம் 7.2 சதவீதமம்,
91 முதல் 180 மின் அலகுகளுக்கான மின் கட்டணம் 3.4 சதவீதம்
180 மின் அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவின் கட்டணம் 1.3 சதவீதம்
மத ஸ்தலங்கள் சுமார் 3.2 வீதத்தால் குறைக்கப்படும்
என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தொழிற்சாலைகள், பொதுப்பிரிவுகள், தெருவிளக்குகள் மற்றும் அரசு நிறுவனங்களின் வகைக் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஹோட்டல் தொழில்துறையின் மின்சாரக் கட்டணம் 12.6 வீதத்தால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது