குருவுக்கு சீடன் கிண்டல்!

-நஜீப்-

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் குளியாப்பிட்டியாவில் நடந்து. அந்தக் கூட்டத்துக்கு நாடு பூராவிலுமிருந்து ஆட்களை தொகுதி அமைப்பாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.  உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக மனுவில் பெயரைப் பதிந்திருந்தவர்கள் அனைவரும் போல அங்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

Sri Lanka's ruling party fractures over leadership question | Tamil Guardian

அந்தக் கூட்டத்தில் எதிரணித் தலைவர்களை விவரப் படங்கள் மூலம் காட்டி  ரணில் விளக்கம் சொல்லி பேசி இருந்தார். அப்போது அவர் இன்று சஜித் அணியில் முக்கிய செயல்பாட்டுகாராக இருக்கும் பேராசிரியர் ஜீ.எல். பீரிசை மிகவும் நையாண்டி பண்ணி பேசி இருந்தார். இந்த ஜீ.எல். பீரிசிடம் தான் ரணில் சட்டம் பயின்றிருக்கின்றார்.

International Conference of Asian Political Parties

ஜீ.எல்.லை ஒரு சட்டாம்பி என்று பேசியதை பெரும்பலான குடி மக்களுக்கு ஜீரணிக்கக் கஸ்டமாக இருந்தது. பேரசிரியர் ஒரு கவர்ச்சியற்ற அரசியல் வாதியாக இருக்கலாம். என்றாலும் அவரிடம் சட்டம் பயின்ற எந்த ஒரு சட்டத்தரணியும் இப்படி கீழ் தரமாக இது வரை அவரை விமர்சித்ததில்லை. இது பற்றி பேராசிரியரிடம் கருத்துக் கோட்டால் இப்படிப் பேசியவர் ரணிலா என்று தனக்கு நம்ப முடியவில்லை என்று அவர் கூறுகின்றார்.

நன்றி: 17.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இந்தியா:நாடாளுமன்ற தேர்தல்: ஏப்ரல் 19 முதல் 7 

Next Story

 கோட்டா எதிர்ப்பு: சாடிய தேரர்