நஜீப்
நன்றி 29.11.2026 ஞாயிறு தினக்குரல்
1.பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் நமது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கும் திட்டம் மிகவும் ஆபத்தானது என்று கம்மன்பில கடும் எதிர்ப்பு!
2.நாம் 2019ல் ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகள் செய்தாலும் 2028 அளவில்தான் எமக்கு அதிகாரத்துக்கு வரலாம் என நம்பினோம். அது முன்கூட்டி வந்துவிட்டது.-சதுரங்க எம்பி.!
3.சானி அபேவிக்ரம மிகத்திறமையான அதிகாரி சுரேஸ் சலே சான்றிதழ்.! அசாட் மௌலானாவை தெரியாது என்ற சலே அவரோடு ரூம் போட்டு (15,16.08.2020) அவுங்கல ஹோட்டலில் தங்கி இருந்தாராம்!
4.நாம் அதிகாரத்தில் இருந்த போது ஜேவிபி. எங்களுக்கு வேலை செய்ய விடவில்லை.-மொட்டு பிரசன்ன.! ஐயா அவர்களுக்கு மூன்றே மூன்று ஆசனங்கள் தானே அன்று இருந்தது.!
5.அமெரிக்க செனட் சபையை 56-44 என்ற எண்ணிக்கையிலும் காங்கிரசை 260-175 என்ற வித்தியாசத்திலும் ஜனநாயகவாதிகள் கைப்பற்றி விட்டனர். இது இறுதி நிலவரம்.!
6.சீனா விஜயத்தின் போது வட கொரிய அதிபரை சந்திக்க ட்ரம்ப் எடுத்த அனைத்து முயற்சிகளையும் கிம் ஜாங் உன் நிராகரித்ததால் அவருக்கு பெருத்த அவமானம்.!
7.சஜித்-நாமல் கூட்டணி உதயமானால் தமது நாடாளுமன்ற வாய்ப்புக்கள் அடிபட்டுப்போகும் என்று ஐமச. கூட்டணியில் இருக்கும் சிறுபான்மை தலைமைகள் பெரும் கவலையாம்.!




