நஜீப்
நன்றி:30.08.2026 ஞாயிறு தினக்குரல்
1.இன்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித்துக்கும் மொட்டுக் கட்சி வாரிசு நாமலுக்கும் தமது அரசியலில் இரண்டாம் இடத்துக்காக கடுமையான பந்தயம் நடந்து வருகின்றது!
2.சில சிறுபான்மைக் கட்சிகள் முதலமைச்சர்களுக்கு கோட் சூட் தயாரித்து விட்டன. ஆனால் சீருடை விவகாரம் போலி கூட்டணியை கிழித்துத் தொங்க விட்டிருக்கின்றது.!
3.2027 வரவு செலவுத் திட்டத்திலும் ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து அரச சேவையை வலுப்படுத்த இருப்பதாக ஜனாதிபதி அனுர மீலாத் உரையில் அறிவிப்பு.!
4.என்பிபி.காரரும் மூத்த சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தொலைக் காட்சி விவாதமொன்றுக்கு வருவதாக கூறி எஸ்கெப். லாலை மற்றுமொரு லால் தடுத்தாராம்!
5.அரசியலமைப்பு இருபத்தி இரண்டாவது திருத்தம் தொடர்பாக ஒரு பகிரங்க விவாதத்துக்கு பிரதான எதிர்க்கட்சி தலைவருக்கு அழைப்புக் கொடுத்தாலும் இதுவரை பதிலில்லையாம்.!
6.ஜனாதிபதி அனுர தனது இரண்டு வருட பதவி நிறைவை முன்னிட்டு நாடுபூராவும் பிரச்சாரக் கூட்டங்களை அடுத்த வாரம் களுத்துறை மாவட்டத்தில் துவங்குகின்றார்!

7.இயற்கை என்பது அழகானது மட்டுமல்ல அதிகமான அபத்தானதும் கூட. நேபாள பேரழிவு இதனையே நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றது.துயரங்கள் எந்த உருவிலும் வரலாம்.!





