நஜீப்
நன்றி: 19.10.2025ஞாயிறு தினக்குரல்
1.எல்லாம் மறுக்கும் நாமல் கச்சாவுக்கு தொழில் கொடுத்ததை மட்டும் ஏற்பது அது பதிவில் இருப்பதால்!
2.பௌத்த சாசன அமைச்சு விவகாரத்தில் முதலைக்கண்ணீரைத் துடைக்க முஸல்மானே விட்டுக் கொடுத்து முன்மாதிரி காட்டலாம்!
3.கதிர்காம சட்ட விரோத மாளிகை தனதல்ல-கோட்டா. ஆனால் நீர்க்கட்டணம் அவர் பேரில்தான் வருகின்றது.!
4.சட்டத்தரணி வன்னிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை வழங்கி இருக்கின்ற போது புதிய பேசுபொருள் செவ்வெந்தி!
5.இன்னும் இரண்டு வாரங்களில் மொட்டுக் கட்சி தனது ஆட்டத்தை துவங்க இருக்கின்றது-சானுக்க பா.உ.!
6.மனுஷ அமைச்சராக இருந்த நாட்களில் இஸ்ரேலுக்கு மோசடியில் தொழிலுக்கு போனவர்களில் 80வீதம் அவரது ஊரவர்களாம்!
7.பாதாள-போதைக் குற்றவாளிகளுக்கு ஊடகங்கள் கொடுக்கும் விளம்பரம் அவர்களை ஹீரோக்காளாக்கின்றது-பேராசிரியர் மைர சமரகோன்.!