குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்

நன்றி: 03.05.2026 ஞாயிறு தினக்குரல்

1.தாம் நடாத்துகின்ற மே தினத்துக்கு சஜித் ஐதேக.வுக்கு விடுத்த அழைப்பை செயலாளர் தலதா அதுகோரள, சுவரில் பட்ட பந்து போல நிராகரித்திருக்கின்றார்.!

2.தமிழகத் தேர்தல்: இறுதியாக நமது கணிப்பை ஒரு முறை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். ஏ.40 பி.32 சீ.20 டி.6 ஏனைய.2 என்ற சதவீதம்தான்.

3.சஜித் அணி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நிதி மோசடி ஒன்று தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு சவால் விட்டார். விவாதம் தயாராக ஆள் மாயமாம்!

4.ஜேவிபி. வரலாற்றில் முதல் முறையாக தனது மே தின பேரணிகளை தேர்தல் மாவட்ட ரீதியல் நடாத்தி இருக்கின்றது. அதன்படி 21 இடங்களில் ஜேவிபி. மே தினம்.!

5.எடுத்ததெற்கெல்லாம் ஜனாதிபதியை பதவி விலகக்கோரும் சஜித் தனது அமைப்பாளர்கள் போதை குற்றச்சாட்டில் கைதாகும் போது எப்படி அவர் பதிவியை தொடர முடியும்?

6.ஜனாதிபதி கோட்டா கையாளாக இருந்த சுவிஸ்வர இந்த நாட்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடாத்தப் போன இடத்தில் ஊரவர்கள் விரட்டியடித்துள்ளார்கள்.!

7.இரான் விக்கிரமரத்ன கிரிக்கட் சபைத் தலைவராக நியமனம். இரான் கட்சிப் பதவிகளைத் துறந்தால் போதாது அங்கத்துவத்தையும் விடு என சஜித் கடுப்பில் கடிதம்.

Previous Story

මහා භාණ්ඩාගාර සහකාර අධ්‍යක්ෂගේ, අභිරහස් මරණයේ ඇත්ත කතාව හෙළිවේ