நஜீப்
நன்றி: 12.04.2026 ஞாயிறு தினக்குரல்
1.போர் முடிந்ததும் இங்குள்ள இனவாதிகளுக்கு முஸ்லிம் விரோத பரப்புரைகளை செய்து அதிகாரத்துக்கு வர வேண்டிய தேவை இருந்தது-அமைச்சர் பிமல்.!
2.இடைக்கால சமாதானம் பற்றி இஸ்ரேல் பிரதமர் ஆதங்கம். இதுபற்றி நமக்கு ஏதும் தெரியாது. ‘ட்ரம்ப் நமக்கு இப்படிப் பண்ணிடாரு’ நியாயம் இல்லாத செயல்!
3.சினிமாவில் ஒருவர் பல பாத்திரங்களில் நடிப்பது தெரிந்ததே. அதுபோல என்பிபி. தலைவரை சமூக ஊடகங்கள் ஆர்.பிரேமதாச. ஏ.ஐ. பிரேமதாச எனக் கிண்டல்!
4.நேட்டோ பற்றி ட்ரம்ப்: தனக்கு ஆபத்தான நேரத்தில் எவரும் உதவிக்கு வரவில்லை. நாம் பில்லியன் கணக்கான பணத்தை குப்பையில் போட்டு ஏமாந்துட்டோம்.!
5.பேரூந்துகளில் தனியாக பயணிப்போரை மயக்க மருந்து கெடுத்து கொள்ளையடிக்கின்ற கும்பலின் அட்டகாசம் தமிழ் பிரதேசங்களில் அதிகளவில் அரங்கேறி வருகின்றது.
6.லால் காந்த வீடு பற்றி பரபரப்பான தகவல்களும் முறைப்பாடுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தான் கொள்ளையடித்த பணத்தில் கட்டியதல்ல -லால்காந்த.!
7.ஆளுக்கு ஆள் புத்தகம் போட்டு குற்றவாளிகளை மாறி மாறிக் காட்ட முடியுமாக இருந்தால் நாட்டில் சட்டம் பொலிஸ் நீதி மன்றங்கள் எல்லாம் எதற்கு சாமி!





