நஜீப்
நன்றி:25.01.2025 ஞாயிறு தினக்குரல்
1.பெற்றோர் என்னதான் இந்த வருடம் (2026) ஆறாம் தர கல்வி சீர்திருத்தங்களை அமுல் படுத்துமாறு போராடினாலும் அதற்கு சாத்தியம் மிகவும் கம்மி.!
2.தனக்கு ஜேவிபி. டில்வின் தரப்பால் உயிராபத்து வரலாம் என்ற அச்சத்தில் இருந்த நந்தன குனதிலக அது பற்றி பலரிடம் எத்தி வைத்திருந்தாராம்.
3.எனக்கு போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ரணிலால் போடப்பட்டவை தான். இதுவரை ஜனாதிபதி அனுர தனக்கு எந்த வழக்கும் போடவில்லை.
4.தேர்தல் காலத்தில் கொடுக்கபட்ட வாக்குறுதிகளில் முப்பதில் பத்தை (10/30) என்பிபி நிறைவேற்றியுள்ளதாக ஒரு ஆய்வில் கூறப்படுகின்றது.
5.தமிழரசுக்குள் சுமந்திரன் தரப்பால் சிரிதரன் திட்டமிட்டு ஓரம்கட்டப்பட்டு வருகின்றார். இதனை தொண்டர்களும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.!
6.மழைக்குக் கூட பாடசாலை கூரையின் கீழ் ஒதுங்காதவர்கள் கல்வி சீர்திருத்த குறைபாடுகளை பூதக்கண்ணாடி வைத்து தேடித் திரிகின்றார்கள்.!
7.இரவில் எங்காவது ஒரு நாய் ஊழையைத் துவங்க அனைத்து நாய்களும் அதில் இணைவது போலத்தான் எதிரணி செயல்பாடுகள்-நளின் ஹேவகே





