குரல் தரும் குறுச்செய்திகள்! (14.09.2025)

-நஜீப்-

நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல்

1.வீட்டிலிருந்து வெளியேற கடிதம் கேட்ட மஹிந்தவுக்கு மசோதாவையே கையில் கொடுத்து அனுப்பினார் அனுர.

2.பாராளுமன்ற அமர்வுகளைத் தொடர்ச்சியாக குழப்பியடிப்பதற்கு எதிரணியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

3.இந்தோனேசிய பொலிஸ் திடீரென உள்ளே நுழைகின்ற போது கமாண்டோ சலிந்த ரொட்டி சுட்டுக் கொண்டிருந்திருக்கின்றார்.

4.போதை வியாபாரிகள் கைதில் தமது பங்களிபை இந்தோனேசிய பொலிசார் வீடியோவில் உலகுக்கு காட்சிப்படுத்தினார்கள்.

5.அரசுதான் கெண்டேனர்களை துறைமுகத்திலிருந்து கடத்தியது.!அப்போ அது எப்படி மொட்டுக் கோட்டைக்குள் வந்தது!

6.ஜேவிபி. கைப்பற்றிய யக்கல-சோசலிஸ்ட்கள் காரியாலயத்தில் தற்போது பொலிசார் குடியேறி இருக்கின்றார்கள்!

7.விஜேராம வீட்டை திருத்தம் செய்ய மஹிந்த நாற்பத்தேழு (47) கோடி பெற்றாலும் செலவுகளில் தெளிவில்லாத ஒரு நிலை.

8.இராணுவ லூத்தினன் தரத்தில் ஒருவர் பாதாள உலக கமாண்டோ சலிந்தவுக்கு தோட்டா விற்பனை செய்ததால் கைது.

9.நாமல் திருமணத்துக்கு தற்காலிக மின்சாரம் பெற்ற 27 இலட்சம் கடணத்தை செலுத்தாதற்கு வழக்குத் தாக்கல்.

10.ராஜாவை வரவேற்க தங்கல்லையில்  லட்சக்கணக்கில் கூடுவார்கள் என எதிர்பார்த்தாலும் வரவு சில நூறுதானாம்.

Previous Story

சம்பத் மனம்பேரி கதை முடிந்தது.? සම්පත් මනම්පේරි අතුරුදහන් කර ඝාතනය කරලාද?රාජපක්ෂලාගේ රහස් ගබඩාව මොහුයි.

Next Story

නේපාලය භාරගන්න මම සූදානම් - වැලා