குரல்தரும் குறுஞ் செய்திகள்

நஜீப்

நன்றி:22.02.2026 ஞாயிறு தினக்குரல்

1.நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் தடை சட்டத்தால் அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடுவார்கள்-சஜித்.! அப்போ இதுவரை பண்ணியது!

2.அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சட்டதராணி முகத்தை பூச்சாலையில் (மல்சாலாவ) சரி செய்ய 23 இலட்சம் ரூபாய்கள் செலவாகியதாம்.

3.இன்று நாட்டை மீட்ட வீரனாக நாடகமாடுகின்ற மஹிந்த ராஜபக்ஸ போர்காலத்தில் நாட்டுக்கு செய்த துரோகம் என்று பீல்ட்மார்சல் வீடியோ வெளியீடு!

4.தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த போது மாகாணசபை பற்றிய பேச்சுவார்த்தைகள் ஏதும் மேற்கொள்ளவில்லை.-டில்வின்

5.லசந்த கொலையுடன் அப்பாவி மலையக இளைஞன் யேசுதாசன் மற்றும் இரு வன்னி இளைஞர்ளை சம்பந்தப்படுத்தி அவர்கைள கொன்றும் இருக்கின்றார்கள்.!

6.ரிசாட் பதியுதீன் வீட்டில் தீகாயங்களுடன் உயிரிழந்த ஹிசாலியின் வழக்கு மே 5ம் தகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7.சஜித் ரணில் இணைந்தால் மட்டும்  இந்த அனுராவை வீழ்த்த முடியாது இடதுசாரிகளையும் எம்முடன் இணைத்துக் கொள்ள வேண்டும்- வஜிர!

Previous Story

සඟ සමුළුවේ දේශපාලනය: මාලිමා ආණ්ඩුවට ගොඩ යාමට මගක්! විපක්ෂයට උගුලක්!