நஜீப்
நன்றி 16.11.2025 ஞாயிறு தினக்குரல்
1.தனிக்கட்சிக்கு அதிகாரம் செல்வது பேரபத்து. என்பிபி. பெற்ற தனிப்பெரும்பான்மையால் சிலருக்கு நடுக்கம் அதனால் கூட்டணிக்கு அழைப்பு!
2.பல தசாப்தங்களாக கட்டி முடிக்காத நிலையில் இருக்கும் நிந்தவூர் அஸ்ரஃப் மண்டபத்தை கட்ட ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு.!
3.சஜித்தின் இந்திய விஜயம் பற்றி கட்சியில் யாருக்குமே தெரியாது. உத்தியோகபூர்வ அழைப்பா என்பதும் தெரியாது-அர்ஷத டி சில்வா!
4.பல கருப்பாடுகள் அரச உளவுத்துறையில் உயர்பதவிகளில் எச்சரிக்கின்றார் முன்னாள் பொலிஸ் அதிகாரியும் யூடிபருமான அஜீத்.
5.மிகவிரைவாக சிறைக்குப் போக இருப்பவர்களைப் பார்க்க வேண்டுமாக இருந்தால் 21ம் திகதி பேரணிக்கு போய் வாருங்கள்-மரிக்கார்!
6.நுகேகொட பேரணிக்கு ஒரு இலட்சம் பேரை அழைத்து வருவோம் அடித்துக் கூறுகின்றார் மொட்டு ஜொன்ஸ்டன் பர்ணாந்து!
7.ரணில் தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை கையளிப்பதாக வாக்குறுதி தந்திருக்கின்றார்.-ஹரின் பர்ணாந்து.





