குரங்குகள் சீனப் பயணம் ரத்து!

-நஜீப்-

உத்தியோகபூர்வமான அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கின்ற போது விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான செய்தியை வெளியிட்டார். அது நாட்டில் பெரும் ஹீட்டாகி, உணவுக்காக என்றும் பரிசோதனைக்கு என்றும் பல்வேறு செய்திகள் வலம் வந்தது.

இதற்கு சீனத் தூதுவராலலயம் தற்போது உத்தியோகபூர்வமாக விளக்கம் சொல்ல வேண்டி வந்தது. நாம் அப்படி எந்தக் குரங்குகளையும் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை கிடையாது என்று சொல்லி விட்டது.

இதனால் தற்போது இலங்கைக் குரங்குகளின் சீன விஜயமும் இரத்து. ஆனால் இதிலுள்ள கேள்வி என்ன வென்றால் இப்படியாக அமைச்சரவைக் கூட்டத்தில் போலியான செய்திகளைக் கட்டவிழ்த்து  நாட்டை கேலிக்கு உற்படுத்திய அமைச்சரிடம் இந்த நாட்டில் எந்தக் கேள்விகளையும் அதிகார அரசியலில் இருக்கின்றவர்கள் ஒருபோதும் கேள்வி எழுப்பமாட்டார்கள்.

இதுதான் நமது அரசியல் கலாச்சாரம்.ஆனால் அமைச்சரோ இன்னும் குரங்குக் கதையை விட்டபாடில்லை.

நன்றி23.04.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தள்ளாடுகின்றது சஜீத் கூடாரம்!

Next Story

‘என் வயது 45, என் உடலின் வயது 22’ - இளமையை தக்க வைக்க அமெரிக்க தொழிலதிபர் என்ன செய்கிறார் தெரியுமா?