குரங்கம்மை: எப்படி பரவுகிறது? சிகிச்சை, அறிகுறிகள் ?

இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இந்த தொற்று பதிவாகியுள்ளது.

குரங்கம்மை

குரங்கு அம்மை என்பது என்ன?

குரங்கு அம்மை என்பது அரிதான ஒரு வைரஸ் தொற்றாகும். இதனால் லேசான பாதிப்புகளே ஏற்படும் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள் எனவும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வைரஸ் ஒருவரொருக்கொருவர் எளிதில் பரவாது, இதனால் பரவலாக பாதிக்கப்படும் ஆபத்து மிகவும் குறைவானது.

இந்தியாவில் இதுவரை நான்கு பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.

குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.

ஆரம்பக் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி போன்ற அறிகுறிகள் தென்படும். அதன் பின் காய்ச்சல் வந்ததும் தடிப்புகள் ஏற்படுகிறது. முதலில் அது முகத்தில் தோன்றி பின் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுகிறது. பொதுவாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களுக்கு பரவுகிறது.

அரிப்பு அதிகமாகி அது வலி மிகுந்ததாகிவிடும். அதன்பின் பல்வேறு கட்டங்களாக உருவெடுத்து சிரங்கு உண்டாகும். அதன்பின் அது மறைந்துவிடும். ஆனால் கொப்பளங்கள் தழும்பை ஏற்படுத்தலாம்.

பொதுவாக இந்த தொற்று 14 – 21 நாட்களில் தானாக சரியாகிவிடும்.

எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

குரங்கம்மை வைரஸ் எப்படி பரவும்?

ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் குரங்கம்மை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.

தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுக் குழாய் வழியாகவும், வாய், மூக்கு, மற்றும், கண்கள் வழியாகவும் மனித உடலுக்குள் குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி நுழையும்.

Monkeypox virus particle

குரங்கம்மை பாலியல் ரீதியாகப் பரவும் நோய் என்று கூறப்பட்டதில்லை. ஆனால் இது உடலுறவின்போது ஒருவருடன் ஒருவர் உடல் ரீதியாக நெருக்கமான தொடர்பில் இருந்தாலே பரவக்கூடியது.

நோயால் பாதிக்கப்பட்ட குரங்கு, அணில், எலி போன்ற விலங்குகளுடன் தொடர்பில் இருக்கும்போதும், குரங்கம்மையை உண்டாக்கும் வைரஸ் கிருமி படிந்துள்ள படுக்கைகள் ஆடைகள் போன்றவை மூலமும் இக்கிருமி பரவுகிறது.

இந்தியாவில் குரங்கம்மை

இந்தியாவில் முதலாவதாக குரங்கம்மை பாதிப்பு, ஜூலை 14ஆம் தேதி கேரளாவின் கொல்லத்தில் பதிவானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த அந்த நபருக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டது.

இரண்டாவதாக, துபாயில் இருந்து கேரளத்துக்கு வந்த 31 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு பரிசோதனையில் உறுதியானது. கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் கேரளாவுக்கு வந்த 35 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. மலப்புரத்தை பூர்விகமாகக் கொண்ட அவர், ஜூலை 6ஆம் தேதி கேரளாவுக்கு வந்ததாகவும், அங்குள்ள மஞ்சேரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

தற்போது டெல்லியில் ஒருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட அந்த 31 வயது நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். உலகளவில் இதுவரை 16 ஆயிரம் பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்த தொற்றால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இது எத்தனை ஆபத்தானது?

பொதுவாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்படும். அம்மைநோய் அறிகுறிகளைப் போலதான் அது இருக்கும். ஒரு சில வாரங்களில் தானாக சரியாகிவிடும்.

ஆனால் சில சமயங்களில் தீவிரமானதாகவும் இருக்கலாம். மேற்கு ஆப்ரிக்காவில் இதனால் இறப்புகளும் ஏற்பட்டுள்ளது.

எப்போது பரவ தொடங்கியது?

குரங்கம்மை சோதனை

முதன்முதலில் இந்த வைரஸ் பிடித்து வைக்கப்பட்ட குரங்கில் கண்டறியப்பட்டது. அதன்பின் 1970ஆம் ஆண்டிலிருந்து இங்கொன்றும் அங்கொன்றுமாய் 10 ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டது.

2003ஆம் ஆண்டு முதன்முதலில் அமெரிக்காவில் இந்த தொற்று ஏற்பட்டது. ஆப்ரிக்காவை தவிர்த்து பிற நாட்டில் இந்த பாதிப்பு ஏற்பட்டது அதுவே முதல்முறை.

சிறிய பாலூட்டிகளால் தொற்று பாதிக்கப்பட்ட தரை நாய் என்று அழைக்கப்படும் ஒருவகை எலி இனம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்ட நேரத்தில் அதனோடு தொடர்பில் இருந்த மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. அப்போது 81 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இறப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

2017ஆம் ஆண்டு நைஜீரியாவில் பெரியளவிலான தொற்று ஏற்பட்டது. 172 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டது. அதில் 75 சதவீதம் பேர் 21 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள்.

குரங்கம்மைக்கான சிகிச்சைகள் என்ன?

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், குரங்கம்மைக்கு குறிப்பாக எந்த சிகிச்சையும் இல்லை என்று தெரிவிக்கிறது. இருப்பினும் இது பரவுவதை கட்டுப்படுத்தலாம். அதேபோல குரங்கம்மைக்கு ஏற்கனவே சந்தையில் அனுமதியளிக்கப்பட்ட மருந்துகள் உள்ளன.

சிடோஃபோவிர், ST-246, வேசினியா இம்யூன் க்ளோபுலின் போன்ற மருந்துகள் குரங்கம்மை தொற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல சர்வதேச அளவில் ஒப்புதல் வழங்கப்பட்ட JYNNEOS என்ற தடுப்பு மருந்தும் உள்ளது. இது குரங்கம்மை வராமல் தடுக்கிறது. சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. இது நெதர்லாந்து மருந்து தயாரிப்பு நிறுவனமான பவாரியன் நார்டிக் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்த முந்தைய தரவுகள், ஆப்ரிக்காவில் இதை பயன்படுத்தியதில் 85 சதவீத அளவில் இது குரங்கம்மையை தடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல சின்னம்மைக்கான தடுப்பு மருந்து ACAM2000, இதுவும் குரங்கம்மைக்கு எதிராக செயல்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2003ஆம் ஆண்டு அமெரிக்காவில் குரங்கம்மை பரவியபோது இந்த தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டது.

Previous Story

குஜராத்: கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

Next Story

இளையராஜா எம்.பி பதவிப் பிரமாணம்