“குண்டாக இருப்பவர்கள்.. கண்டிப்பாக 2 டிக்கெட் வாங்கணும்..”

சர்ச்சையை கிளப்பிய பிரபல விமான நிறுவனம்!

உலகளவில் பிரபலமாக இருக்கும் லோ காஸ்ட் ஏர்லைன் ஒன்று இப்போது மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது உடல் பருமனாக இருப்போர் கட்டாயம் கூடுதல் டிக்கெட்டை வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

உலகெங்கும் இப்போது லோ காஸ்ட் ஏர்லைன் எனப்படும் குறைந்த விலையில் டிக்கெட்களை விற்கும் விமான நிறுவனங்களே இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. நமது நாட்டில் இண்டிகோ கூட இந்த லோ காஸ்ட் மாடலில் தான் செயல்படுகின்றன.

உலகளவில் பார்க்கும்போது இன்னுமே நம்ப முடியாத ரேட்டிற்கு கூட நமக்கு விமான டிக்கெட்கள் கிடைக்கும். லோ காஸ்ட் விமான நிறுவனங்கள் அதேநேரம் இதுபோன்ற லோ காஸ்ட் விமான நிறுவனங்களில் சில சர்ச்சைக்குரிய கட்டண முறைகளும் இருக்கும்.

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த சவுத் வெஸ்ட் ஏர்லைன் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது. அதாவது 2026ஆம் ஆண்டு முதல், இந்த ஏர்லைனில் செல்லும் உடல் பருமன் கொண்ட பயணிகள் இரண்டு டிக்கெட்களை கட்டாயம் வாங்க வேண்டுமாம்.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது. உடல் பருமனாக இருப்போரால் பக்கத்தில் இருக்கும் பயணிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை சவுத் வெஸ்ட் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த புதிய பாலிசிபடி அண்டை இருக்கையை ஆக்கிரமிக்கும் பயணிகள் ஒரு டிக்கெட்டை கூடுதலாக வாங்க வேண்டும். மேலும், இந்தப் பணத்தை சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் திரும்பவும் பெற முடியாதாம்.

ஷாக் கூடுதல் டிக்கெட் தற்போதுள்ள நடைமுறையின்படி, உடல் பருமன் கொண்ட பயணிகள் ஒரு கூடுதல் டிக்கெட்டை முன்கூட்டியே வாங்கலாம் அல்லது விமான நிலையத்தில் கூடுதல் சீட் கோரி கோரிக்கை விடுக்கலாம். விமானம் நிரம்பவில்லை என்றால் உடல் பருமனாக இருப்போருக்கு இலவசமாகவே கூடுதல் சீட் ஒதுக்கப்படும்.

அதேநேரம் விமானம் முழுமையாக நிரம்பி இருந்தால் கூடுதல் டிக்கெட்டிற்கான பணத்தை அவர்கள் செலுத்த வேண்டும். இந்த பாலிசி உடல் பருமன் கொண்டவர்களை ஈர்த்தது. பலரும் சவுத் வெஸ்ட்டை தேர்வு செய்ய ஆரம்பித்தனர்.

3 கண்டின் இருக்கைகளுக்கு இடையே உள்ள கைப் பிடி  தான் சீட்டை நிர்ணயம் செய்யும் எல்லையாகக் கருதப்படும். தற்போதுள்ள பாலிசிப்படி உடல் பருமன் கொண்ட பயணிகள் பணத்தைத் திரும்பப் பெற மூன்று நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

முதலில் விமானத்தில் குறைந்தது ஒரு காலி இருக்கையாவது இருக்க வேண்டும். இரு இருக்கைகளும் ஒரே கட்டண வகுப்பில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். பயணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் ரீபண்ட் கோரிக்கை விடுக்கலாம்.

தற்போதுள்ள கொள்கைப்படி இந்த 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் கூடுதல் டிக்கெட் வாங்கினாலும் ரீபண்ட் கிடைத்துவிடும். இந்த 3 நிபந்தனைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கட்டணம் திரும்பக் கிடைக்காது! கட்டாயம் தற்போதுள்ள கொள்கையின் கீழ் கூடுதல் டிக்கெட் வாங்குவது ஆப்ஷனல் தான். கட்டாயம் இல்லை.!

ஆனால், அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரும் புதிய கொள்கையின் கீழ் கட்டாயம் கூடுதல் சீட்டை வாங்க வேண்டும். ஒருவேளை கூடுதல் டிக்கெட்டை முன்பதிவு செய்யவில்லை என்றால், அவர்கள் புறப்படும் கேட்டில் சவுத் வெஸ்ட் ஏர்லைன் ஏஜெண்டுகளிடம் இது குறித்து விளக்க வேண்டும்.

அவர்கள் விமானத்தில் இடம் இருந்தால், பயணிகளுக்கு இலவசக் கூடுதல் இருக்கையை வழங்குவார்கள். விமானம் முழுவதுமாக நிரம்பியிருந்தால் மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படுமாம்.

அதேநேரம் சவுத் வெஸ்ட் விமான நிறுவனம் ஐஸ்லாந்தியர், சீனா ஏர்லைன்ஸ் ஆகியவற்றுடன் பார்ட்னஷிப் அமைத்துள்ள நிலையில், அதில் பயணிப்போர் கட்டாயமாக இந்தக் கூடுதல் டிக்கெட்டிற்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வெளியான பரபர ஆடியோ சர்ச்சை அதாவது பாலிசிக்கள் அப்படியே தான் இருக்கிறது. முன்பு கூடுதல் டிக்கெட் ஆப்ஷனலாக இருந்த நிலையில், இப்போது இது கட்டாயமாக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது பலருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் சவுத் வெஸ்ட் ஏர்லைன் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஏமன் தலைநகர் மீது இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல்!

Next Story

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி!