-நஜீப்-
நன்றி ஞாயிறு தினக்குரல் 27.07.2025
இந்த அரசு பதவிக்கு வந்த சில நாட்களிலே எங்கே சொன்னபடி கள்வர்களைப் பிடித்து விட்டீர்களா என நாமல் சஜித் போன்றவர்கள் தினந்தோறும் கிண்டலடித்து வந்தார்கள். அதற்கு பதில் கொடுத்த ஜனாதிபதி அனுர சற்றுப் பொறுமையாக இருங்கள். முறையாக அது நடக்கும்.
ஆனால் உள்ளே தள்ளும்போது எவரும் கதறக் கூடாது என்று அவர் சொல்லி இருந்தார். அந்தக் கதறல்களைத்தான் நாம் இன்று பார்த்து வருகின்றோம்.

இப்போது நடக்கின்ற விசாரணைகள் கைதுகள் தண்டணை எல்லாமே நல்லாட்சி காலத்தில் முன்வைக்கப்பட்டு அவர்களே மூடிமறைத்தவை.
சஜித் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களும் கூட கோட்டா காலத்தவை. ஊழல் பேர்வளிகள் வைத்தியசாலைகளிலும் பங்கர்களிலும் தஞ்சம். நாட்டில் ஆயிரக் கணக்கான சட்டவிரோத செகுசு வாகனங்கள் இருப்பதாக புதிய தகவல்.
இதில் சம்பந்தப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு காசு தர வேண்டி இருக்கின்றது என்று முன்னாள் சிப்பாய் ஒருவரின் செயற்கை காலை அடியாட்களை வைத்து தூக்கிச் சென்றிருக்கின்றாராம்.!





