-நஜீப்-
தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து தற்போது பெரும் தேக்க நிலை தெரிகின்றது. நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்தியா ஊடாக நல்ல அறுவடைகளை பெற்றுக் கொள்ள சிறப்பான ஆடுகளம் இருந்தும் தமிழ் தலைமைகள் அரங்கில் ஆடுவதற்குப் பதிலாக பார்வையாளர் களரியில்தான் உட்கார்ந்திருக்கின்றார்கள் என்று நமக்குத் தோன்றுகின்றது.
உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தற்போதய அரசு காலாவதியான பண்டம் என்ற நிலையில் இருக்கின்ற இந்த நேரத்தில் சர்வ கட்சி மாநாடு, தமிழ் தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு, என்பவற்றிற்குப் போய் அமர்வதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
இதனை இராஜதந்திரம் என்று சொல்வதைவிட முதுமையில் பொழுது போக்கும் முயறச்சிகள் என்றுதான் நாம் பார்க்கின்றோம். வேடிக்கை: வேறு சிலர் அரசுக்கும்-புலம்பேர் தமிழர்களுக்கும் பலமாக இருக்கப் புறப்பட்டிருக்கின்றார்களாம். எனவே அரசியல் தலைமைகளில் நம்பிக்கை வைப்பதைவிட சிவில் சமூகங்கள் சமூக அரசியலில் ஆதிக்கம் பெற வேண்டும் என்பது நமது கருத்து.
நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.03.2022