காற்சட்டைக்கும் ரூபாவுக்கும் முடிச்சு!

-நஜீப்-

சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ரூபா டொலரின் விலையை சற்று வீழ்ச்சியடையச் செய்திருந்தது. இது யதார்த்தமல்ல அரசின் திட்டமிட்ட ஏற்பாடு இது திரும்பவும் இன்னும் சில தினங்களுக்கு பழைய நிலைககு வந்து விடும். இப்படிக் குறிப்பிடுகின்றார் ஜேவிபி. ஹதுன் ஹெத்தி.

அதே போன்று அந்தக் கட்சியைச் சேர்ந்த சமந்த வித்தியரத்ன பதுளையில் நடந்த தேர்தல் பிரச்சராக் கூட்டமொன்றில் இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். இலங்கை ரூபா ரணிலின் காற்சட்டையைப் போன்றது.

அதனை எப்படித் தூக்கிப் பிடித்தாலும் அது கீழ் நோக்கி சரிந்து கொண்டுதான் போகும் என்று அங்கு  பேசி இருக்கின்றார் இந்த சமந்த வித்தியாரத்ன. இவர்கள் என்னதான் தேர்தல் கூட்டங்களை போட்டாலும் ஆட்களைச் சேர்த்தாலும் தேர்தல் இப்போதைக்குக் கிடையாது என்பது உறுதியாகி இருக்கின்றது.

அடுத்த வாரம் தபால் வாக்குகள் நடைபொறும் என்று கூறிய தேர்தல் ஆணையாளர் புஞ்சிஹேவா இப்போது அது சாத்தியம் இல்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் தனக்கு மட்டும் இந்தப் பணியை முன்னெடுக்க முடியாது இதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கை விரித்திருக்கின்றார்.

நன்றி: 19.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இம்ரான் வீட்டை உடைத்து புகுந்த காவல்துறை!

Next Story

நேபாளத்தில் இந்துத்துவா அரசியல்! இஸ்லாமியர்கள் இடையே பதற்றம்!!