காணாமல் போன பீனிக்ஸ்!

-நஜீப்-

களுத்துறை நாவலப்பிட்டி புத்தளம்-ஆரச்சிக்கட்டுவ ஆகிய இடங்களில் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் பிறப்பெடுப்பது போல் மொட்டுக் கட்சியை உயிர்ப்பிக்க ராஜபக்ஸாக்களுக்கு விசுவாசுமான அடியாட்கள் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

கூட்டத்துக்கு ஆட்களை எடுத்துவரப் பட்ட கஷடங்களை ஏற்பாட்டாளர்கள்தான் அறிவார்கள். பிரதேசத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இருக்கின்ற இடங்களில் பல்வேறுவழிகளில் பணம் சம்பாதித்தவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் அங்கு கூட்டங்களைச் சேர்த்தார்கள்.

வந்தவர்களும் முன்பு போல உணர்வுபூர்வமான கூட்டத்துக்கு வந்தவர்கள் அல்ல. பிடித்து வரப்பட்டவர்கள் போலத்தான் அவர்கள் இருந்தார்கள். இப்போதைக்கு நாட்டில் எந்தத் தேர்தல்களும் கிடையாது என்பதனை மொட்டுக் கட்சி நிருவாகிகள் முன் கூட்டியே அறிந்து வைத்திருப்பதால் இப்போதைக்கு கூட்டத்தை சேர்க்க வீனே காசைச் செலவு செய்ய வேண்டியதில்லை என்று அவர்கள் தீர்மானித்து விட்டார்கள்.

அத்துடன் இப்போதைக்கு சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் பிறக்க வாய்ப்பும்  கம்மியாக இருப்பதால் அவர்கள் சம்பால் கூட்டங்களை நிறுத்தி விட்டதாகத் தெரிகின்றது.

நன்றி:27.11.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அமெரிக்கா வரை சென்று தாக்கும் வடகொரியாவின் ஹ்வாசாங்-17 ஏவுகணை: கிம் பெருமிதம்

Next Story

மீண்டும் வேதாளம் வருகை!