-நஜீப்-
தெற்கில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றம் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுப்பது போலத் தெரிந்தாலும், விடிவு எப்போது என்று யாருக்கும் தெரியாது. சதிகளும், படைப் பலமும் பணமும் குறுக்கே வந்து அதற்கு வேட்டு வைத்தாலும் வியப்பில்லை.
அத்தோடு மீண்டும் என்ன உருவத்தில் இனவாதம் தாண்டவம் ஆடுமோ தெரியாது. இன்னும் எத்தனை சஹ்ரான்கள் கூலிக்கு வேலைக்கு வருவார்களோ சொல்லத் தெரியாது. இந்தப் பின்னணியில் முஸ்லிம் அரசியல் மீது ஒரு பார்வை.!
சமூக விடிவுக்காக மு.கா.வைத் துவங்கினார் தலைவர் அஸ்ரஃப். போராளிகள் புடைசூழ சிங்கமாய் தலைவர் நடைபோட, இளசுகளும் பெரியவர்களும் நரம்புகள் புடைக்க ‘நரே தக்குபீர்’ கோஷம் விண்ணைத் தொடும். மூலை முடுக்கெல்லாம் கட்சி கீதங்கள் கேட்கும். தேசிய மா நாடு, பேராளர் மாநாடு, மாவட்ட மாநாடுகள் போடுவார்கள். கட்சிக் கிளைகள் மத்திய கிளைகள் என்று கூட்டங்களும் கோசங்களும், கொடிகளும் கிராமங்களில் குறுச்சிகளில் ஒழுங்கைகளில் தெரியும்.
துடிப்புடன் இருந்த அந்தக் இயக்கத்தை இன்று சமூகத்தில் காணவில்லை. நமது தலைவர்கள் போல அதுவும் சந்தையில் விலைப் பட்டு விட்டதோ என்னவோ.! போராளிகளே புத்திஜீவிகளே, இளசுகளே அஸ்ரஃப் தந்த அந்த முகவரியை நீங்கள் தேடமாட்டீர்களா? சிந்தியுங்கள்.!
நன்றி: 18.06.2023 ஞாயிறு தினக்குரல்