காசுக்கு கைதட்டும் கூட்டம்!

-நஜீப்-

பேரின சமூகம் அரசியல் ரீதியில் விளிப்படைந்து வருகின்ற பின்னணியில் சிறுபான்மை சமூகங்கள் அரசியல் ரீதியாக முட்டால்களாகிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் சம்பந்தன் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது பெரும்பாலான தமிழ் தலைமைகள் அதனை புறக்கணித்து விட்டார்கள்.

இதனை நாம் சரி என்றோ பிழை என்றோ சொல்ல வரவில்லை. அவர்கள் பேரினத்து சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுடன் இணைந்து நாடகமாடுகின்ற ஒரு நிலைதான் காணப்படுகின்றது. எனவே தான் வடக்கு-கிழக்கு எனப் பிரித்து பேச்சுவார்த்தை ஒழுங்குகள்.

இது ஆபத்தானது. அரசியல்வாதிகள்தான் சமூகத்தை வழிநடத்த வேண்டும். தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆரோக்கியம் இல்லத ஒரு செயற்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்து அண்மையில் புத்தளத்தில் நடந்த மு.கா. மாநாட்டில் தலைவருக்கு பெரிய மனவு வந்து பல்டிக்காரர்களுக்கு மன்னிப்பு வழங்குவது பற்றிப் பேசி இருந்தார். இதற்கு முன்னர் அவர்களுக்கு தண்டனை வழங்குவது பற்றி தலைவர் பேசிய போது தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி இருந்தார்கள்.

மன்னிப்பு என்ற போதும் கரகோஷம். இதிலிருந்து கூலிக்கு கோஷம் போடும் கூட்டம்தான் தலைவர் பின்னால் திரிகின்றது என்பதனை சமூகம் எப்போதுதான் புரியும்.?

நன்றி:20.11.2022ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாடசாலைக் கல்வியில் நவீன தொழினுட்பத்தின் செல்வாக்கு

Next Story

மகளை உலகுக்குக் காட்டிய வடகொரிய அதிபர் கிம் !